இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து தனது முடிவினை அறிவித்த – கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி செயல்பட்டு வருகிறார். இவருக்கும் கேப்டன் விராத் கோலிக்கும் இடையே நல்ல பிணைப்பு இருப்பதால் சற்று ஆரோக்கியமான சூழ்நிலையை இந்திய அணி பெற்றுள்ளது. மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இவர்களது அணி சிறப்பாக விளையாடினாலும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைவதை வாடிக்கையாக கொண்டு வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் கோலி மீதும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்தன.

IND

- Advertisement -

மேலும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாம் கட்ட இந்திய அணி தற்போது இலங்கை பயணத்திற்கு சென்றுள்ளது. அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ரவிசாஸ்திரியை ஓரம் கட்டிவிட்டு ராகுல் டிராவிட்டை முழு நேர பயிற்சியாளர் ஆக மாற்ற வேண்டும் என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த முக்கிய மாற்றம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் கூறுகையில் :

முதலில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியட்டும் அதன் பின்னர்தான் நம்முடைய புதிய அணி எப்படி இருக்கிறது ? எப்படி விளையாடுகிறது ? என்பது தெரியும். ஒரு புதிய பயிற்சியாளரை உருவாக்குவது சரியான ஒரு முயற்சிதான் என்றாலும் அதே நேரத்தில் ரவிசாஸ்திரி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரை நீக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும் என புதிய பயிற்சியாளர் குறித்த கேள்விக்கு கபில்தேவ் பதில் அளித்தார்.

Dravid

மேலும் சில தோல்விகளால் எழும் கருத்துக்கள் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். தற்போது இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஒருவர் போனால் அவரின் இடத்தை நிரப்புவதற்கான வீரர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றனர் இதுதான் நம்முடைய அணியின் பலம். இப்போது இருக்கும் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து மற்றும் இலங்கையை தொடரை நம்மால் வெல்ல முடியும்.

dravid

இந்த நேரத்தில் நம்முடைய அணியின் பயிற்சியாளர் மாற்றம் தேவையில்லை என்றும் இந்தத் தொடரின் மூலம் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளராக டிராவிட்டும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement