2025 ஆசியக் கோப்பை இந்திய அணி.. 1983 உ.கோ அணியை வீழ்த்தும்.. அவர் இன்னும் அசத்தனும்.. கபில் தேவ்

Kapil Dev
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அத்தொடரில் பாகிஸ்தானை 3வது முறையாக தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இந்நிலையில் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி 1983 உலகக்கோப்பை வென்ற அணியை டி20 கிரிக்கெட்டில் தோற்கடிக்குமா என்று கபில் தேவிடம் செய்தியாளர் கேட்டார்.

அதற்கு தற்போதைய அணி தம்முடைய தலைமையிலான 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என்று கபில் தேவ் தெரிவித்தார். ஏனெனில் தங்களுக்கு டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளரை ஸ்பின்னர்கள் போல் நொறுக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

1983 வெற்றி இந்திய அணி:

மேலும் தொடர்நாயகன் விருது வென்ற அபிஷேக் ஷர்மா இன்னும் சில வருடங்கள் அசத்தினால் மட்டுமே சிறந்த வீரர் என்று சொல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வித்தியாசமான கேள்விக்கு இந்தியா டுடேவுக்கு கபில் தேவ் கொடுத்த பதில் பின்வருமாறு. “அதை சொல்வது மிகவும் கடினம். அவர்களால் எங்களைத் தோற்கடிக்க முடியும்”

“ஏனெனில் அவர்களுக்கு எப்படி டி20 விளையாட வேண்டும் என்பது தெரியும். எங்களுக்கு தெரியாது. சொல்லப்போனால் கடந்த 10 வருடத்திற்கு முன்பு விளையாடிய வீரர்களுக்கு கூட தற்போதைய டி20 கிரிக்கெட்டின் பிராண்டை விளையாடத் தெரியாது. இப்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை அதை பேட்ஸ்மேன்கள் ஆஃப் அல்லது லெக் ஸ்பின்னர் வீசுவது போல ஸ்வீப் செய்கிறார்கள்”

- Advertisement -

அபிஷேக் அசத்தனும்:

“அதற்காக நீங்கள் 2 வெவ்வேறு தலைமுறைகளை ஒப்பிட முடியாது. ஆனால் தற்போதுள்ள தலைமுறை நன்றாக இருக்கின்றனர் என்று என்னால் சொல்ல முடியும். அவர்களுடைய ஆட்டத்தை நம்ப முடியவில்லை. அவர்கள் எங்களுடைய அணியை விட பன்மடங்கு சிறந்தவர்களாகவே தெரிகின்றனர். ஆசியக் கோப்பையில் நம்முடைய வீரர்கள் தங்களது வேலையைச் செய்தனர்”

இதையும் படிங்க: என்னோட முதல் சதத்தை அவங்களுக்கு டெடிகேட் பண்றேன்.. வித்தியாச கொண்டாட்டம் பற்றி ஜுரேல் பேட்டி

“அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடினார். ஆனால் இன்னும் சில வருடங்களில் அவருடைய ஆட்டத்தை எதிரணியினர் புரிந்து கொள்வார்கள். அதை சமாளிக்க பும்ரா அல்லது மலிங்கா போன்ற பவுலர்களையும் அபிஷேக் சர்மாவுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். அதையும் தாண்டி அந்த வீரர் 2, 3வது செஷனில் நன்றாக விளையாடும் பட்சத்தில், சரி இவரிடம் ஸ்பெஷல் திறமை இருக்கிறது என்று சொல்லலாம்” எனக் கூறினார்.

Advertisement