என்னோட முதல் சதத்தை அவங்களுக்கு டெடிகேட் பண்றேன்.. வித்தியாச கொண்டாட்டம் பற்றி ஜுரேல் பேட்டி

Dhurv Jurel
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி அஹமதாபாத் நகரில் துவங்கிய நடைபெற்று வருகிறது. அபோட்டில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரிவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 448/5 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 286 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணிக்கு கேஎல் ராகுல் சதத்தை அடித்து 100 ரன்கள் குவித்தார். மிடில் ஆடரில் அசத்திய துருவ் ஜுரேல் 125 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

முதல் சதத்தை:

அவருடன் சேர்ந்து விளையாடிய ஜடேஜா 104* ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முன்னதாக ரிஷப் பண்ட் காயமடையும் போதெல்லாம் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறும் துருவ் ஜுரேல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இப்போட்டியில் அரை சதத்தை அடித்த அவர் சல்யூட் செய்து ராணுவத்தில் பணியாற்றிய தன்னுடைய தந்தையை மரியாதை செய்யும் வகையில் கொண்டாடினார்.

அதே போல இந்தியாவுக்காக அடித்த தன்னுடைய முதல் சதத்தை பேட்டை நேராக வைத்து சுற்றி வித்தியாசமாக கொண்டாடினார். இந்நிலையில் அவ்வாறு கொண்டாடியது இந்திய ராணுவத்திற்காக என்று தெரிவிக்கும் ஜுரேல் தம்முடைய முதல் சதத்தை ராணுவத்துக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சமர்ப்பித்த ஜுரேல்:

“அரை சதமடித்த போது வெளிப்படுத்திய கொண்டாட்டம் என்னுடைய தந்தைக்கானது. அது என்னுடைய மனதில் நீண்ட காலமாக இருக்கிறது. ஏனெனில் நான் இந்திய ராணுவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். என்னுடைய தந்தையை சிறுவயதில் இருந்தே பார்த்துள்ளேன். நாங்கள் களத்தில் செய்வதையும் ராணுவத்தினர் எல்லையில் செய்வதும் கடினமானது. அதே சமயம் நீங்கள் அதை ஒப்பிட முடியாது. அவர்கள் எப்போதும் மரியாதையை வைத்துள்ள நான் வருங்காலங்களிலும் அவர்களுக்காக இப்படி கொண்டாடுவேன்”

இதையும் படிங்க: அரைசதம் அடிக்கும்போதே இப்படி ஒரு சாதனையா? தெறிக்கவிட்ட ஜடேஜா – 4 இந்திய வீரராக அசத்தல் சாதனை

“இந்த சதத்தை அவர்கள் செய்யும் விஷயங்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களை மிகவும் நெருக்கமாக பார்க்கும் நான் அவர்கள் செய்யும் விஷயங்களால் ஈர்க்கப்பட்டுள்ளேன். ராணுவ விஷயங்கள் பற்றி என்னுடைய தந்தையிடமும் நான் அடிக்கடி கேட்பேன். எனவே இதை தகுதியான அவர்களுக்காக நான் டெடிகேட் செய்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுவது கௌரவமானது. தொடர்ந்து விளையாடாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் போது அசத்துவதற்காக நான் கடினமாக உழைக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement