100 வருஷ கிரிக்கெட்டில் நடராஜன் போல யாருமில்லை. இந்த ஐ.பி.எல் தொடரின் ஹீரோ அவர்தான் – கபில் தேவ் புகழாரம்

Kapil Dev
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 13 வது சீசனில் தமிழக வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி தங்களது பெயரை உலகத்திற்கு பலமாக கூறியுள்ளனர் என்றே கூற வேண்டும். ஏனெனில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் நடராஜன் என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்த மூவரும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Nattu-2

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் தனது யார்க்கர் திறமையின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் பெரும்பாலான போட்டிகளில் டெத் ஓவர்களில் அவர் சிறப்பாக பந்து வீசினார். இதன் காரணமாக இவருக்கும் வருண் சக்கரவர்த்திக்கும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம் கிடைத்தது.

ஆனால் எதிர்பாரா விதமாக தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் இருந்து வெளியேற அந்த இடத்தில் தற்போது நடராஜன் விளையாட இருக்கிறார். இந்நிலையில் ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் கொண்ட இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Kapil-dev-2

தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நடராஜன் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் : ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஹீரோ நடராஜன் தான். அவர் அச்சமின்றி பல யார்க்கர்களை சிறப்பாக வீசினார். இன்று மட்டுமல்ல கடந்த நூறு ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த யார்க்கர் பந்துவீச்சு இதுதான்.

Nattu

மேலும் 100 வருடங்களில் இவரைப்போல ஒரு தொடர்ச்சியான யார்க்கர் வீசும் ஒரு அருமையான பந்து வீச்சாளரை நான் பார்த்ததில்லை. பயமில்லாமல் அருமையாக பந்து வீசுகிறார் என்று நடராஜனை வாயார புகழ்ந்துள்ளார். ஏற்கனவே நடராஜன் திறமையையும் லட்சுமணனும் பாராட்டியிருக்க தற்போது கபில் தேவ்வும் பாராட்டியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement