- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யார் அந்த ஆளு? யோக்ராஜ் சிங்கிற்கு ஒற்றை வரியில் மாஸ் பதிலடி கொடுத்த கபில் தேவ்.. நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எப்போது பேசினாலும் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பவராக இருந்து வருகிறார். கடந்த காலங்களில் தோனி தான் தம்முடைய மகனுடைய கேரியரை அழித்து விட்டதாக அவர் கூறியதை மறக்க முடியாது. அந்த வரிசையில் கபில் தேவ் தம்மை இந்திய அணியில் இருந்து நீக்கியது பற்றி சமீபத்தில் அவர் பேசியிருந்தார்.

குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக வந்ததும் வடக்கு மண்டலம் மற்றும் ஹரியானா உள்ளூர் அணிகளில் இருந்து தம்மை காரணம் இல்லாமல் கபில் தேவ் நீக்கியதாக யோக்ராஜ் கூறியிருந்தார். அது பற்றி அவரிடம் தம்முடைய மனைவி கேள்வி கேட்க விரும்பியதாகவும் யோக்ராஜ் தெரிவித்தார். அப்போது கபில் தேவுக்கு பாடம் எடுப்பேன் என்று மனைவியிடம் சொன்னதாகவும் யோக்ராஜ் கூறினார்.

- Advertisement -

யார் அந்த ஆள்:

அப்படியே துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவ் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக திட்டியதாகவும் யோக்ராஜ் கூறினார். குறிப்பாக உங்களுடைய தலையில் தோட்டாவை இறக்க விரும்பினாலும் உங்கள் அருகே அன்பான அம்மா இருப்பதால் உங்களை இப்படியே விட்டு செல்கிறேன் என்று கபில் தேவிடம் நேருக்கு நேராக சொன்னதாக யோக்ராஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது பற்றி கபில் தேவ் அவர்களிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டார்கள். அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “யார் அவர்? யாரைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?” என்று சொன்னார். அதற்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் என்று செய்தியாளர்கள் அவருக்கு தெளிவுப்படுத்தினார்கள். அதை கேட்ட கபில் தேவ் “அப்படியா? வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று கூலாக பதிலளித்தார்.

- Advertisement -

புரியாத புதிர்கள்:

அதாவது அந்த ஆள் யார்? என்ற வகையில் யோக்ராஜ் சிங் பற்றி கபில் தேவ் கூறியுள்ளார். அவர் கூறுவது போல யோக்ராஜ் சிங் இந்தியாவுக்காக வெறும் ஒரு டெஸ்ட் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படாததாலேயே அவரை அப்போதைய கேப்டன் கபில் தேவ் இந்திய அணியிலிருந்து நீக்கினார்.

இதையும் படிங்க: கம்பீர், அகார்கர் மீது ரோஹித் சர்மாவிற்கு எவ்வித விரோதமும் இல்லை.. முற்றுப்புள்ளி வைத்த – ராஜீவ் சுக்லா

சொல்லப்போனால் தன்னுடைய மகன் யுவராஜ் சிங் சாதித்ததில் பாதியளவு கூட அவர் சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் தன்னுடைய உழைப்பில் 10% உழைத்திருந்தால் கூட யுவராஜ் மகத்தான வீரராக வந்திருப்பார் என்று யோக்ராஜ் சமீபத்திய மற்றொரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் அவருடைய அதிரடியான கருத்துக்கள் புரிந்துகொள்ள முடியாததாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -