- Advertisement -
ஆசிய கோப்பை

பாக் வீரர்கள் மேலே தவறில்லை.. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தான் இந்தியா மேல் இந்த பொறாமை.. கபில் தேவ்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்தப் போட்டியில் எப்படியாவது இந்திய அணியை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர்.

ஏனெனில் ஏற்கனவே இத்தொடரில் 2 முறை இந்திய அணியிடம் பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. மேலும் 2021க்குப்பின் இந்தியாவுடன் விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றுள்ளது. அதனால் “இந்தியாவை விடாதீர்கள் பழி தீர்க்க வேண்டும்” என்று சூப்பர் 4 போட்டியின் முடிவில் ஹரிஷ் ரவூப் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு பாகிஸ்தான் ரசிகர் வெறித்தனமாக கெஞ்சி வீடியோ வைரலானது.

- Advertisement -

ரசிகர்களுக்கு பொறாமை:

இந்நிலையில் இந்திய அணி மீது பாகிஸ்தான் வீரர்களிடம் எந்த கோபமும் இல்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். ஆனால் நம்மை விட எப்படி இந்தியா சிறப்பாக விளையாடுகிறது என்ற பொறாமை பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி என்டிடிவி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“(பாகிஸ்தான்) வீரர்கள் அதிக கோபத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. பாகிஸ்தானிய மக்கள் பேசுவதை கேட்கும் போது அவர்கள் ஒரு உணர்வைத் தருகிறார்கள். அவர்கள் (பாகிஸ்தான் ரசிகர்கள்) நம்முடைய அணி களத்தில் நன்றாக செயல்படும் போதிலும் இந்த நாடு (இந்தியா) எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று கருதுகின்றனர்”

- Advertisement -

கபில் தேவ் கருத்து:

“பாகிஸ்தான் வீரர்கள் நாம் அவர்களை விட சிறந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் அதை எடுத்துக் கொள்வதில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியையும் வீரர்களையும் விதவிதமாக கிண்டலடித்து விமர்சிப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: 5 மேட்ச்ல வெறும் 71 ரன்ஸ்.. என்ன பேட்டிங் இது? ப்ளீஸ் இதை சேஞ்ச் பண்ணுங்க.. சூர்யகுமாருக்கு – இர்பான் பதான் கேள்வி

குறிப்பாக லீக் சுற்றில் கை கொடுக்காத இந்திய அணி தோல்வியாளர் என்றும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சொன்னதாக அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர். ஆனால் தாம் அப்படி சொல்லவில்லை என்று ரிக்கி பாண்டிங் ட்விட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார். அப்படி பொய்யான செய்தியை பரப்பும் அளவுக்கு இந்திய அணி மீது பாகிஸ்தான் ரசிகர்கள் வன்மத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -