என்னா மனுஷன்யா! தனது ஆல் டைம் சாதனையை தகர்த்த அஷ்வினுக்கு கபில் தேவ் வழங்கிய பரிசு – என்னனு பாருங்க

Ashwin
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று மொகாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் இலங்கையை பந்தாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.

ashwin 1

- Advertisement -

இதன் வாயிலாக 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இந்த தொடரின் 2வது போட்டியில் வரும் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் களமிறங்க உள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா – இலங்கை ஆகிய அணிகள் ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன.

சாதித்த அஷ்வின்:
முன்னதாக மொகாலியில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை முறியடித்தார். 80 மற்றும் 90 களில் இந்தியாவின் நாயகனாக வலம் வந்த கபில்தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்து இதுநாள் வரை அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்களை எடுத்து அவரை முந்தியுள்ள அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

Ashwin

கபில் தேவ் என்பவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான ஜாம்பவானாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை முந்தி உள்ள அஸ்வினுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். குறிப்பாக “சமீப காலங்களாக முழு வாய்ப்பு கிடைக்காத அஸ்வினுக்கு இது மிகப்பெரிய சாதனையாகும். ஒருவேளை அவருக்கு கிடைக்காத வாய்ப்புகளில் எல்லாம் அவர் விளையாடி இருந்தால் இந்த 434 விக்கெட்களை அவர் எப்போதோ முந்தியிருப்பார். எனது சாதனையை அவர் உடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அந்த சாதனையை இன்னும் நான் எதற்கு பிடித்து வைத்திருக்க வேண்டும்? ஏனெனில் என்னுடைய காலங்கள் முடிந்து போய் விட்டன” என தனது ஆல் டைம் சாதனையை அஸ்வின் உடைத்தது பற்றி கபில் தேவ் வெளிப்படையாகவே பாராட்டி இருந்தார்.

- Advertisement -

கபில் தேவ் அனுப்பிய பரிசு:
இந்நிலையில் தமது ஆல் – டைம் சாதனையை முறியடித்ததை பாராட்டும் வகையில் பரிசு ஒன்றை அனுப்பி கபில் தேவ் பாராட்டியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதுபற்றி பிசிசிஐ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் அவர் கூறியது பின்வருமாறு. “இது ஒரு நீண்டநாள் கனவாகும். இருப்பினும் இவ்வளவு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பங்களில் ஒன்றாக எப்போதும் இருந்ததில்லை. அந்தத் தருணத்தில் கபில் தேவ் மிகவும் இனிமையாக நடந்து கொண்டார். சொல்லப்போனால் அவர் தமது கையொப்பமிட்ட வாழ்த்துச் செய்தி அடங்கிய ஒரு நோட் புத்தகத்துடன் கூடிய ஒரு பூங்கொத்தை எனது வீட்டிற்கு பரிசாக அனுப்பி என்னை பாராட்டினார்” என கூறினார்.

kapil dev

இதை அறிந்த பல ரசிகர்கள் “கபில் தேவ் என்னா மனுஷன்யா, லெஜெண்ட் என்றால் கபில் தேவ் தான்” என்பதுபோல் பெருமையுடன் அவரை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு சில முன்னாள் வீரர்கள் மனதிற்குள் ஒன்று வைத்துக் கொண்டு பெயருக்காக வெளியில் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களைப் போல் அல்லாமல் ஒரு படி மேலே சென்ற கபில் தேவ் நேரடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் வீட்டுக்கு தனது கையொப்பம் அடங்கிய வாழ்த்துச் செய்தி புத்தகத்துடன் கூடிய புத்தகத்தையும் பரிசாக அனுப்பி தன்னை ஒரு ஜாம்பவான் என மீண்டும் நிரூபித்துள்ளார்.

எப்போவும் அவர்கள்தான் லெஜெண்ட்:
“சில நேரங்களில் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களை ரசிகர்கள் மறந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் இந்தியாவிற்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் அவர்களால் தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன்” என கூறினார். அதாவது என்னதான் கபில்தேவ், ஹர்பஜன் சிங் போன்றவர்களை முந்தினாலும் கூட என்றுமே அவர்கள் தான் லெஜெண்ட் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பெருமையுடன் கூறியுள்ளார். அந்த காலங்களில் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து உத்வேகம் அடைந்ததால் தான் இன்று இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிறேன் என்று ஜாம்பவான்களுக்கு அஸ்வின் புகழாரம் சூட்டினார்.

kapil dev 1

தற்போது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அஸ்வின் அடுத்த 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என நம்பப்படுகிறது. எனவே 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக முதலிடத்தில் இருக்கும் மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவையும் அவர் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement