- Advertisement -
இந்திய கிரிக்கெட்

22 – 25 வயசு இளமை திரும்பாது திறமை மறக்காது.. ஃபார்முக்கு வர அந்த 2 ஜாம்பவான்களிடம் பேசுங்க.. கபில் தேவ்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்சமயத்தில் தடுமாற்றமாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் சுமாராக விளையாடியது. சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது.

அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடியும் அரை சதம் கூட அடிக்கவில்லை. அந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்த ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பினார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் விராட் கோலி இன்னும் பெரிய ரன்கள் குவிக்காதது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கபில் தேவ் அட்வைஸ்:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களால் இளமைக்கு திரும்ப முடியாது என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதற்காக அவர்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற திறமையை மறந்திருப்பார்கள் என்று அர்த்தமல்ல எனவும் கபில் கூறியுள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்முக்கு திரும்ப அவர்கள் கவாஸ்கர், டிராவிட் போன்ற ஜாம்பவான்களிடம் ஆலோசனைகளைக் கேட்க வேண்டுமெனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் கபில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ரன்கள் அடிக்காத போது நிறைய பிரச்சனைகள் எலும்பும். அது போன்ற சூழ்நிலையில் உங்களைப்போல் விளையாடக்கூடிய ஸ்டைலைக் கொண்ட வீரர்களிடம் பேச வேண்டும். உங்களுடைய பழைய ஆட்டங்களின் வீடியோக்களைப் பார்த்து எப்படி விளையாடினார்கள் என்பதை ஆராய வேண்டும்”

- Advertisement -

இளமை திரும்பாது:

“ரோஹித் அல்லது விராட் கோலி மீண்டும் 22 – 25 வயதிற்கு மீண்டும் வர முடியாது. ஆனால் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை மீண்டும் புரட்டிப் பார்ப்பது உங்களின் ஆட்டத்தை நன்றாக புரிந்து கொள்வதற்கு உதவும். கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையைப் பற்றிய விளையாட்டு. ஆம் வீரர்கள் வயதை அடைவார்கள். அதற்காக அவர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்து விட மாட்டார்கள்”

இதையும் படிங்க: உடையும் இந்தியாவின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கனவு? விலகிய பும்ரா, வருண் சேர்ப்பு.. புதிய அணி இதோ

“அதே சமயம் இந்த வயதுக்கு தகுந்தார் போல் உங்களுடைய ஆட்டத்தை மாற்றி அமைக்க சுனில் கவாஸ்கர் ராகுல் டிராவிட் போன்ற அனுபவமிக்க வீரர்களிடம் நீங்கள் பேச வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் தான் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -