இங்கிலாந்தில் ரொம்ப அதிரடியா விளையாடனும்னு நெனச்சா சீக்கிரம் அவுட் ஆய்டுவ – இந்திய வீரரை எச்சரித்த கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்தியா அணி அடுத்ததாக இங்கிலாந்து சென்று நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டிகளில் பங்கேற்று விளையாடும் இந்திய அணி குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் ஒவ்வொருநாளும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் விளையாட இருக்கும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டின் ஆட்டம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து நல்ல முதிர்ச்சியுடன் விளையாடி வருகிறார். முன்னணிப் பவுலர்களை எதிர்கொண்டு கடினமான பல ஷாட்டுகளை எல்லாம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே அவரின் எண்ணம் ஆனால் இங்கிலாந்து மைதானத்தில் ஒவ்வொரு பந்தினையும் அடித்து ஆட நினைக்கக்கூடாது. மேலும் பந்தினை சரியாக எதிர்கொண்டு மிடில் பேட்டில் விளையாடவேண்டும் இங்கிலாந்து மைதானங்களை பொறுத்த வரை பொறுமையாக விளையாடி பந்தினை டைமிங் செய்தால் போதும் சிறப்பாக விளையாடலாம். அதைவிடுத்து ஒவ்வொரு பந்தையும் அடிக்க நினைத்தால் விரைவிலேயே ஆட்டமிழந்தும் வெளியேற வேண்டியதுதான்.

pant 1

எனவே ரிஷப் பண்ட் நிச்சயம் இந்த தொடரில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோன்று ரோகித் சர்மாவும் இப்படித்தான் அதிரடியாக விளையாட நினைத்து பலமுறை அவர் ஆட்டம் இழந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நிதானம் ரொம்பவே முக்கியம் அதனால் இங்கிலாந்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமென கபில்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பண்ட் தனது ரன் குவிப்பையே சிக்ஸ் அடித்து தான் துவங்கினார்.

pant six

அதைத்தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வரும் பண்ட் டெஸ்ட் போட்டியில் தனது அதிரடியான பாணியில் சிறப்பாகவே விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட நடைபெற்று முடிந்த பல தொடர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள ரிஷப் பண்ட் இந்த தொடரின் முக்கிய பிளேயராக இருப்பார் என்றும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement