அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்த கபில் தேவ் – ஆசிய கோப்பையில் களமிறங்கும் விராட் கோலி பற்றி கூறியது இதோ

Kapildev
Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் கடந்த 2019க்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் 23000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டாராக உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார்.

Virat Kohli IND vs PAK

அப்படி பெரிய பெயரை வைத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் பெரிய ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விடாமல் எத்தனை நாட்கள் அணியில் விளையாட முடியும் என ஜாம்பவான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விமர்சித்தது பெரிய புயலை கிளப்பியது. இத்தனைக்கும் பார்மை இழந்துவிட்டார் என்று கருதப்படும் இந்த சோதனை காலகட்டத்திலும் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் அவர் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்து வருகிறார். ஆனால் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற முத்திரையுடன் அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

பார்முக்கு திரும்புவாரா:
இருப்பினும் ஆரம்பகாலங்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவரது அருமையை புரிந்து கொண்ட பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் புள்ளிவிவரங்களின் படி பார்ம் அவுட்டாகவில்லை என்றாலும் தனது தரத்திற்கு ஏற்றார்போல் செயல்படாத விராட் கோலி கடந்த 10 வருடங்களாக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் செயல்பட்ட பணிச்சுமை தன்னை பாதித்ததாக வெளிப்படையாக கூறி வருகிறார்.

Kohli

எனவே சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வெடுத்து நல்ல புத்துணர்ச்சியுடன் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அணியிலிருந்து நீக்குமாறு வெளிப்படையாக விமர்சித்த ஜாம்பவான் கபில் தேவ் இந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி சுமாராக செயல்பட்டாலும் கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆதரவு கருத்து:
பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் சுமாராக செயல்பட முடியும் என்று விமர்சித்திருந்த கபில் தேவ ஒருவேளை சிறப்பாக செயல்பட்டு தனது கருத்தை விராட் கோலி பொய்யாக்கினால் தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கடந்த மாதம் கூறியிருந்தார். அந்த நிலைமையில் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்தவர் என்பதால் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என தற்போது கூறியுள்ள கபில் தேவ் அதற்காக ஓய்வெடுக்காமல் விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

kapildev

“விராட் கோலிக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அதைப்பற்றி நாம் சிந்திக்கவும் கூடாது. கடைசி வாய்ப்பு என்ற சொற்களை நாம் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை மட்டுமே அவரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் நீங்கள் அதிகப்படியான ஓய்வு எடுக்கக்கூடாது. முழு நேரமாக கிரிக்கெட் விளையாடும் அவருக்கு அந்த பிரச்சனை இருக்கக்கூடாது”

- Advertisement -

“என்னை கேட்டால் தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் விளையாட வேண்டும் என்பதே முக்கியம் எனக் கூறுவேன். அப்படி விளையாடும்போது நீங்கள் ரன்கள் அடிக்க ஆரம்பித்தால் உங்களது எண்ணங்கள் தாமாக மாறிவிடும். இப்போதெல்லாம் அணியில் யார் இருக்கிறார், இல்லை என்பது வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் எங்களது காலத்தில் பெரிய வீரர்கள் அணியில் இருந்தால் நிச்சயம் விளையாடியே தீர வேண்டும் அவர்களை உட்கார வைக்க முடியாது. தற்போது டி20 வருகையால் அது மாறிவிட்டது”

இதையும் படிங்க: வீடியோ : 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட காட்டடி மன்னன் ரசல் – முரட்டு அடியால் ரசிகர்கள் வியப்பு

“அதனால் விராட், ரோகித் அல்லது அஷ்வின் போன்றவர்கள் ஓய்வெடுத்தாலும் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. அந்த வகையில் இப்போதைய வீரர்களின் எண்ணங்கள் மாறியுள்ளது. எனவே யார் பெரிய பெயர்களை பெற்றுள்ளார்கள் என்பதை விட யார் பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்” என்று கூறினார்.

Advertisement