முகமது ஆமீர் ஐ.பி.எல் ல விளையாடபோறேனு சொல்ற நாடகம் எல்லாம் இதுக்காகத்தான் – கனேரியா குற்றச்சாட்டு

Kaneria

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் தனது 17வது வயதிலேயே 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இளம் வயதிலேயே தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த துவங்கிய இவர் நிச்சயம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பெரிய சாதனைகளை படைப்பார் என்றும் அதுமட்டுமின்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றும் அனைவராலும் அவரது கரியரின் ஆரம்பத்திலேயே புகழப்பட்டார்.

amir

ஆனால் இடையில் அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு தடை பெறவே அவரது அருமையான கிரிக்கெட் கேரியர் பாழாய் போனது. அதன் பின்னர் எப்படியோ போராடி மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக 2017 ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கிய அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன்பின்னர் சோபிக்க தவறினார். இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டுவிடுவது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாக ஆமீர் முதலில் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதன்படி 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் உடனடியாக அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு தொடர்ச்சியாக பாகிஸ்தான் நிர்வாகம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே வருகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது இங்கிலாந்தில் குடியேற உள்ளதாகவும் அதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் முகமது ஆமிரின் இந்த கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா கூறுகையில் : முகமது அமீர் கருத்துக்களை கூற முழு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிரட்டி பார்க்கிறார்.

- Advertisement -

Amir

இங்கிலாந்தில் குடியேறி ஐபிஎல் தொடர்களில் விளையாடுவேன் என்று கூறுவதன் மூலம் அவருக்கு மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று அவர் நம்புகிறார். அவர் நடத்தும் இந்த நாடகம் எல்லாம் பாகிஸ்தான் அணிக்காக அவர் மீண்டும் திரும்புவதற்காக தான் என்றும் இதன் காரணமாகவே அவர் இதைப்போல தொடர்ச்சியாக பேசி வருகிறார் என்றும் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement