கோலிக்கும் தனக்குமான நட்பு எப்படிப்பட்டது ? எங்கிருந்து ஆரம்பித்தது – கேன் வில்லியம்சன் விளக்கம்

Williamson-1
- Advertisement -

தற்போதைய கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு பேட்ஸ்மேன்கள் ஆகவும், சர்வதேச அணிகளின் கேப்டன்களாகவும் திகழ்பவர்கள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆவர். இவர்கள் இருவரும் தங்கள் அணிக்காக 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியிலேயே அறிமுகமாகி கேப்டன்ஷிப் செய்து வந்தவர்கள்.

kohli2

அதுமட்டுமன்றி தற்போது வரை தங்களது சிறப்பான ஆட்டத்தினாலும், அணியை வழிநடத்தும் பண்பினாலும் இருவரும் தங்களது அணிக்கு மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது எதிரணிக்காக இவர்கள் இருவரும் விளையாடி வந்தாலும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

- Advertisement -

ஆரம்பத்தில் இவர்களுக்குள் சில உரசல்கள் இருந்தாலும் அதனை தாண்டி தற்போது இருவரும் பெருமளவில் நட்பு பாராட்டி வருகின்றனர். போட்டிகளில் விளையாடாத போது கூட இவர்கள் இருவரையும் மைதானத்தின் பவுண்டரி எல்லைகளில் ஒன்றாக காண முடியும். அந்த அளவு இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

Kohli-3

இந்நிலையில் விராத் கோலி உடனான நட்பு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள கேன் வில்லியம்சன் கோலி உடனான தனது நட்பினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் அணிகளில் விளையாடினோம் இளம் வயதிலிருந்தே நாங்கள் சந்தித்துக் கொண்டது சிறப்பானது.

- Advertisement -

அந்த பயணம் தற்போது வரையிலும் நன்றாக தொடர்கிறது. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பானது மிகவும் சுவாரசியமான ஒன்று. நீண்ட காலமாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வருகிறோம் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொடர்பான புரிதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Williamson

நேர்மையான எண்ணங்கள் மற்றும் ஆட்டக்களம் தொடர்பான வியூகங்களையும் இருவரும் பரிமாறிக் கொள்கிறோம். எங்களுக்குள் ஒரு நல்ல ஆழமான புரிதல் கலந்த நட்பு உள்ளது என்றும் அது எங்களது வயதிலேயே ஆரம்பித்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement