ஐ.சி.சி வெளியிட்ட புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல். கோலியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்த வீரர் – யார் தெரியுமா ?

kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஆன ஐசிசி அவ்வப்போது சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து தரவரிசைப் பட்டியலை வெளியிடும். மேலும் அணிகளுக்கான தரவரிசையும் அவர்களே வெளியிடுவார்கள். அந்தவகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலை ஐசிசி தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். 917 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஸ்மித் விரைவில் அவரது இடத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் 886 புள்ளிகளுடன் இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Smith

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டைச் சதமடித்த தோடு 251 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். இதனால் 812 புள்ளிகளில் இருந்த அவர் மேலும் 74 புள்ளிகள் அதிகரித்து 886 புள்ளிகளுடன் கோலியை சமன் செய்து இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இவர்களை அடுத்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர இளம் வீரரான லாபுஷன் அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நீல் வாக்னர் 849 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் மூன்றாவது இடத்திலும், டிம் சவுதி நான்காம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

williamson

டெஸ்ட் தரவரிசையில் சமீபத்தில் தனது முதலிடத்தை ஸ்டீவ் ஸ்மித் இடம் இழந்த விராட்கோலி இரண்டாவது இடத்திலேயே நீடித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி கேப்டன் விராத் கோலியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விரைவில் ஸ்மித்தை வில்லியம்சன் முந்த வாய்ப்புள்ளது.

Kohli-2

ஆனால் கோலி சற்று சறுக்கலை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியுடன் கோலி நாடு திரும்புகிறார். ஆனால் ஸ்மித் நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்மித் நிச்சயம் கோலியை விட ஒரு படி மேலே தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement