என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர் இவர்தான் – கேன் வில்லியம்சன் ஓபன் டாக்

Williamson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனக்கென ஒரு தனி அடையாளத்துடன் கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை வகித்து வருகிறார். சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி கேப்டன், பீல்டர் என அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயலாற்ற கூடிய இவர் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த மிகப் பெரிய வீரராக கருதப்படுகிறார்.

Williamson-1

- Advertisement -

மூன்று வகையான கிரிக்கெட் வடிவத்திலும் கோலி, ஸ்மித், ரூட் போன்ற சில வீரர்களில் இவரும் ஒரு குறிப்பிடத்தக்க வீரராக தற்போது உலக அரங்கில் திகழ்ந்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியில் அறிமுகமான இவர் தற்போது வரை 80 டெஸ்ட் போட்டிகள், 151 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டியில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும் 13,000 ரன்களை சர்வதேச அளவில் அவர் அடித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவத்திலும் தடுப்பாட்டம் மற்றும் அதிரடி ஆட்டம் என இரண்டு வகையிலும் அசத்தும் இவர் தற்போது தான் பேட்டிங் செய்ததிலேயே கடினமான பந்துவீச்சாளர் குறித்த தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Williamson

அவரது இத்தனை ஆண்டுகளில் அவர் ஏகப்பட்ட பவுலர்களை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக மிட்செல் ஜான்சன். ஸ்டார்க், பும்ரா, ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இந்நிலையில் தான் சந்தித்த கடினமான பவுலர் குறித்து அவர் கூறுகையில் :

Steyn

நான் கண்டத்திலேயே மிக அச்சுறுத்தலான பவுலர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த ஸ்டெயின் ஒருவர் தான். அவரது பந்து வீச்சில் நான் நிறையவே தடுமாறுவேன். 2013 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவரது வேகத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement