எங்களுக்காக நீங்க எப்போதும் இருக்கீங்க. அதனால் நாங்க தைரியமா இருக்கோம் – உருக்கமான கடிதம் எழுதிய வில்லியம்சன்

Williamson-1
- Advertisement -

கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் தன்னலமற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தற்போது வரை 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் இதனால் மரணித்துள்ளனர்.

Williamson-1

- Advertisement -

இந்தியாவில் 640 பேர் பாதிக்கப்பட்டதுடன் 14 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். சிறிதாக சொதப்பினாலும் கூட கொரோனா தோற்றுவிடும் என்று தெரிந்தும் கூட மருத்துவர்களும் செவிலியர்களும் இதில் இருந்து மக்களை காப்பாற்ற இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகின்றனர்.

இவர்களுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் : கடந்த சில வாரங்களாக நாம் இதுவரை வரலாறு பார்க்காத ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளோம்.

Williamson

இனிவரும் நாட்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. இது மட்டும் உறுதி. ஆனால் அதிர்ஷ்டவசமாக நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் எங்களுடன் இருக்கின்றனர்.
நாங்கள் விளையாட்டு மட்டுமே விளையாடுகிறோம்.

- Advertisement -

ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் உயிருடன் விளையாடுகிறீர்கள். உங்களுக்கு பின்னாள் நாங்கள் இருக்கிறோம்! எப்போதும் இருப்போம்! என்று கடிதம் எழுதியுள்ளார் கேன் வில்லியம்சன். அவரின் இந்த கடிதம் தற்போது உருக்கமான பதிவாக அதிக அளவு பகிரபட்டு வருகிறது.

Corona-1

இந்தியாவிலும் இதே போன்று கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கங்குலி, கம்பீர் மற்றும் பதான் சகோதரர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement