இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால் நவீன கிரிக்கெட்டின் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஓய்வு பெற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அவரைத் தவிர்த்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகிய எஞ்சிய பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் வருங்காலங்களில் அசத்தப்போகும் அடுத்த தலைமுறை ஃபேப் 4 பேட்ஸ்மேன்களை கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார். இப்போதெல்லாம் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்துவதால் நிறைய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனாலேயே ஹென்றிச் க்ளாஸென், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ஆகியோர் மிகவும் குறைந்த வயதிற்குள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
அடுத்த ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் டெஸ்ட் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்குவார்கள் என்று வில்லியம்சன் கணித்துள்ளார். அவருடன் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, இங்கிலாந்தின் ஹரி ப்ரூக் ஆகியோரும் அனைத்து விதமான கிரிக்கெட்டில் அசத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அசத்தப் போகும் வீரர்கள் என்று நினைக்கும் போது எனது மனதில் வரும் வீரர்கள்: யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரச்சின் ரவீந்திரா, ஹரி ப்ரூக். மேலும் கேமரூன் க்ரீன். அந்த அற்புதமான வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தங்களுடைய சிறந்த தருணங்களைக் காண்பித்துள்ளார்கள். தற்போது மிகவும் இளமையாக இருக்கும் அவர்களின் ஆட்டம் இன்னும் வளரும்”
வில்லியம்சன் கணிப்பு:
“இப்போது டி20 ஃபார்மெட் மிகவும் முக்கியத்துவமாக இருந்து வருகிறது. அந்த வடிவத்தில் அதிகப் போட்டிகள் விளையாடப்படுகிறது. ஆனால் அந்தp போட்டியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்து உங்களுடைய பிரச்சனையை தீர்க்கும் விஷயங்கள் இல்லை. டெஸ்ட் போட்டிகள் நீங்கள் 5 நாட்கள் விளையாடும்போது ஒவ்வொரு விஷயமும் சவாலைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: எனக்கா டீம்ல சேன்ஸ் தரமாட்ரீங்க.. இங்கிலாந்துலேயே தங்கப்போகும் ருதுராஜ் கெய்க்வாட் – நடந்தது என்ன?
“அந்தப் போட்டிகளில் உங்களுடைய கவனம், பொறுமை, திட்டம் ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்து முன்னேற முடியும். டெஸ்ட் போட்டிகளில் சூழ்நிலைகள் அதிகம் மாறும். இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிடைக்காது” எனக் கூறினார். அவருடைய இந்த கணிப்பு என்பதை வருங்காலங்களில் பொருத்திருந்து பார்ப்போம்.



