துபாய் போன்ற பெரிய மைதானத்திலும் ஒற்றை கையால் சிக்ஸ் அடித்த வில்லியம்சன் – வைரலாகும் வீடியோ

Williamson

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

pandey

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் ராஜஸ்தான் அணி 5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் போது 12 பந்துகளை சந்தித்த ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வில்லியம்சன் 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 22 ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து பிரியம் கார்க் 8 பந்துகளில் 15 ரன்களை குவிக்க சன் ரைசர்ஸ் அணி டீசண்டான ஸ்கோரை எட்டியது.

அதிலும் குறிப்பாக அவர் ஆர்ச்சர் வீசிய ஒரு பந்தை மற்ற கையால் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அந்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -