நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகஸ்ட் எட்டாம் தேதி தம்முடைய 34வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நியூசிலாந்தின் முதன்மை பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். அந்த வகையில் இதுவரை 100 டெஸ்ட், 165 ஒருநாள், 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18000+ ரன்களை குவித்து நியூசிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
மேலும் கேப்டனாக 2019 உலகக்கோப்பை ஃபைனலுக்கு நியூசிலாந்தை அழைத்துச் சென்ற அவர் தொடர்நாயகன் அழைத்து சென்றார். அத்துடன் அவருடைய தலைமையில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக விராட் கோலி, ஸ்டீல் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருடன் கேன் வில்லியம்சனும் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
ஃபேப் வீரர்கள்:
அந்த நால்வரையும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று வல்லுனர்கள் பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் தம்முடைய பிறந்தநாளில் ஃபேப் 4 பட்டியலில் மீதமிருக்கும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் திறமைகளைப் பற்றி கேன் வில்லியம்சன் பேசியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“3 வகையான கிரிக்கெட்டிலும் புதிய தரத்தை உருவாக்கும் விராட் கோலி அவற்றுக்கிடையே நகரும் திறனை கொண்டவர். கிரிக்கெட்டில் வெற்றி பெறும் திறமை, அவரது இயல்பான சுயநலமற்ற தன்மை, அணிக்கான வெற்றிகளில் அதை பயன்படுத்த விரும்புவதற்கு விடாமுயற்சியுடன் காத்திருப்பதை நான் உண்மையில் பாராட்டுகிறேன். அது இன்னும் நிறைய சேர்க்கிறது. அவரிடம் அது இருக்கிறது”
“ஸ்டீவ் ஸ்மித் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். அதிக தாக்கத்துடன் அவருக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற திட்டத்தை இதுவரை யாரும் கண்டறிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர் பேட்டிங்கில் ஒரு புதிய வகையான அற்புதமான கூறுகளை கொண்டு வந்துள்ளார். அது ஒரே மாதிரியாக இருந்தாலும் விதிமுறைகளை உடைக்கிறது. அந்த வகையில் வீரர்கள் தங்களுடைய தனித்துவமான கலையை நிகழ்த்துவது பாராட்டுக்குரியது”
இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை படைக்காத மோசமான சாதனையை படைத்த விராட் கோலி – இப்படியா ஆகனும்?
“ஜோ ரூட் தனது ஆட்டத்திற்கு உட்படுத்திக் கொள்வதில் மற்ற இருவரை விட வித்தியாசமானவர். அந்த அனைவருமே தங்களுடைய திறனை வைத்து இன்னும் முன்னேறுவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்கள் எங்களைப் போன்ற மற்றவர்கள் பின்பற்றுவதற்கான வரம்பு முறையை அமைக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நான் எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடினேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருப்பது சிறப்பானது” என்று கூறினார்.