ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. அதில் குரூப் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் துபாயில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதிப் பெற்றுள்ளது.
எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தை தோற்கடித்ததைப் போல் மீண்டும் வென்று கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பையை வென்றது. அதே போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்தது.
ஃபைனலில் வெற்றி மாறலாம்:
அந்த வகையில் ஐசிசி ஃபைனல்களில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வென்றதில்லை என்பது இங்குள்ள ரசிகர்களின் கவலையாகவே இருக்கிறது. இந்நிலையில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் ஃபைனலில் தாங்கள் வெல்வது உட்பட எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். எனவே லீக் சுற்றில் சந்தித்த தோல்வியில் கிடைத்த பாடங்களை வைத்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி வில்லியம்சன் பேசியது பின்வருமாறு. “துபாயில் இந்தியா சாதகத்தைக் கொண்டிருப்பது விளையாட்டின் ஒரு அங்கம். அங்குள்ள சூழ்நிலைகள் கண்டிப்பாக நிறைய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அது இயற்கை என்னும் மிருகத்தின் இயல்பு என்று நினைக்கிறேன். உங்களிடம் இருக்கும் எந்தவொரு போட்டியிலும் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்”
வில்லியம்சன் நம்பிக்கை:
“இந்தியாவுக்கு எதிராக அங்கு நாங்கள் விளையாடிய கடைசி போட்டி மகிழ்ச்சியாக இல்லை. அங்கே நல்ல பிட்ச்கள் உள்ளன. இந்தியா ஒரு தலை சிறந்த அணியாக நன்றாக விளையாடுகிறது. எனவே கடந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பாடங்களை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வதற்கு முக்கியம். இப்போட்டியை விடுங்கள். ஃபைனலில் எதுவும் நடக்கலாம். கடந்தப் போட்டி ஒரு சிறந்த சூழ்நிலையாக இருந்தது. அது மீண்டும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: இந்தியாவுக்காக சிரிக்கிற மாதிரி முட்டாள்தனத்தை செய்யலாமா? ஐசிசியை விமர்சித்த டேவிட் லாய்ட்
“எங்களுடைய கவனம் அடுத்தப் போட்டி, மைதானம், எதிரணி ஆகியவற்றில் தான் இருக்கிறது. அங்கே ஒரு முறை நாங்கள் விளையாடியதில் கிடைத்த நேர்மறையான விஷயங்களை இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள ஃபைனலுக்கு எப்படி எடுத்துச் செல்கிறோம் என்பது முக்கியம். பிட்ச் என்பது இயற்கை. நாங்கள் அந்த இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறினார்.



