தோனிக்கு அடுத்து அவரை போலவே சென்னையை கூலாக வழி நடத்த அவர் தான் சரியானவர் – ஓஜா பரிந்துரைக்கும் நியூசி வீரர் யார்

ojha
- Advertisement -

ரசிகர்களின் அபிமான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் மினி வீரர்கள் ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் இந்தியாவைப் போலவே ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான அணியாக சென்னையை ஜொலிக்க வைத்துள்ள கேப்டன் தோனியை மீண்டும் அந்த அணி தக்க வைத்துள்ளது.

Dhoni

- Advertisement -

அதிரடியான பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங் போன்ற அம்சங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உலகில் அளவில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக திகழும் அவர் அந்த அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக கருதப்படுகிறார் என்றே கூறலாம். அதனால் தல என்று தன்னை கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு காரணமாக தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று தோனி வாக்குறுதி கொடுத்துள்ளார்.

சரியான கூல் கேப்டன்:

ஆனால் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விடைபெற்ற அவர் 39 வயதை கடந்து விட்டதால் ஐபிஎல் தொடரிலும் அடுத்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே அடுத்த கேப்டனை உருவாக்குவதற்காக இந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்த அவருடைய திட்டம் வெற்றியடையவில்லை. அதன் காரணமாக கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த புதிய வீரரை வாங்க வேண்டும் அல்லது ருதுராஜ் கைக்வாட் போன்ற இளம் வீரரை வெற்றி தோல்வி பார்க்காமல் வருங்கால கேப்டனாக வளர்க்க வேண்டிய நிலைக்கு சென்னை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

CSKvsSRH

இருப்பினும் யார் வந்தாலும் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது என்ற நிலைமையில் தம்மை பொறுத்த வரை அவருக்குப்பின் அவரை போலவே கூலாக செயல்படும் குணத்தை கொண்ட நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சென்னையின் அடுத்த கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். குறிப்பாக அடுத்த 5 – 6 வருடங்கள் என்ற நீண்ட கால திட்டத்திற்கு கேன் வில்லியம்சன் சரியாக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எம்எஸ் தோனி விளையாடும் வரை சென்னை அணியில் வேறு கேப்டன்கள் இருக்க முடியாது. அது நடந்தால் என்னவாகும் என்பது இந்த வருடம் நமக்கு தெரிந்தது. எனவே அவருக்கு அடுத்தபடியாக யார் கேப்டனாக வரவேண்டும் என்பதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இதை நீங்கள் ஆரம்பத்திலேயே கேட்டிருந்தாலும் கேன் வில்லியம்சன் என்று தான் சொல்லியிருப்பேன். ஆனால் எது எப்படி இருந்தாலும் சென்னை அணியை பொறுத்த வரை எம்எஸ் தோனிக்கு இது கடைசி வருடமாக அமைந்தால் அவர் வைத்துள்ள கேப்டன்ஷிப் பொறுப்பை அடுத்த 5 – 6 வருடங்கள் சிறப்பாக செயல்படும் ஒருவரிடம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது”

Pragyan Ojha

“ஏனெனில் வரலாற்றில் சென்னை அணி எப்போதுமே அடிக்கடி மாற்றங்கள் நிகழ்த்துவதில் நம்பிக்கை கொண்டிருக்காத ஒரு அணியாக இருந்து வருகிறது. அதனாலேயே அவர்கள் நீண்ட கால கேப்டனை நியமிக்க முயற்சிப்பார்கள். மேலும் சென்னை எப்போதுமே நிலையான அணுகுமுறையை கையாளக் கூடியவர்கள். ஒவ்வொரு நாளும் மாற்றங்களை செய்வதை விரும்பாதவர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கேன் வில்லியம்சன் தோனியை போல கூலான குணத்தை கொண்டவர் என்றாலும் சமீப காலங்களில் எல்போ காயத்தால் அதிரடியாக ரன்களைக் குவிக்க தடுமாறி வருகிறார்.

அதனாலேயே அவரை வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வருடம் கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் 2019 உலகக்கோப்பை ஃபைனல், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2021 டி20 உலக கோப்பை ஃபைனல், 2022 டி20 உலக கோப்பை செமி பைனல் என சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய கேப்டன்ஷிப் தோனி போலவே அபாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement