ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் – முதலிடம் யார் தெரியுமா ?

Williamson-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அவ்வப்போது நடைபெறும் தொடர்களின் முடிவில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் வீரர்கள், அணி என அனைத்திற்கும் தரவரிசை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது முதலாவது இடத்தை இழந்துள்ளார்.

smith

- Advertisement -

மேலும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் கோலி 74 ரன்கள் குவித்ததன் மூலம் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறார். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து நான்கு இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஸ்மித் இரண்டு இடங்கள் இறங்கி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் முதலிடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தட்டிப் அளித்துள்ளார்.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு இரட்டை சதம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்ததன் மூலம் தற்போது அவர் 890 புள்ளிகளுடன் இந்த முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி 879 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 877 இடத்தில் புள்ளிகளுடன் 3வது இடத்திலும் முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் இளம்வீரர் லாபுஷேன் நான்காவது இடத்திலும், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் 11 ஆவது இடத்தில் இருந்த ரகானே 5 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர். ஏற்கனவே எட்டாவது இடத்தில் இருந்த சதீஸ்வரன் புஜாரா இரண்டாவது இடம் பின்தள்ளப்பட்டு பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

williamson

இதுநாள் வரை முதலிடத்தில் இருந்த ஸ்மித் இரண்டு இடங்கள் பின் தள்ளப்படும் மூன்றாவது இடத்தில் இருந்த வில்லியம்சன் 2 இடங்கள் முன்னேற்றம் அடைந்து முதலிடத்திலும் உள்ளனர். அண்மையில் ஐசிசி வெளியிட்ட கடந்த பத்து ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் வீரராக விராட் கோலியும், டெஸ்ட் வீரருக்கான விருதை ஸ்டீவ் ஸ்மித்தும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement