இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் பாராட்டுகளை பெற்ற வில்லியம்சனின் செயல் – விவரம் இதோ

Williamson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஐசிசி நடத்தும் 7-வது டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

nzvsaus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணி சார்பாக கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக வார்னர் 53 ரன்களும், மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி இறுதியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

williamson 1

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை கிரிக்கெட் உலக ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக பாராட்டி வருகின்றனர். ஏனெனில் எப்போதுமே அணி நிலைமைக்கு ஏற்றார்போல் நிதானமாக ஆன்கர் இன்னிங்ஸ் விளையாடும் வில்லியம்சன் இந்த போட்டியில் டேரல் மிட்சல் ஆட்டமிழந்து வெளியேறியதால் மற்ற பேட்ஸ்மேன்களை எதிர்பார்க்காமல் தானாக முன்வந்து அதிரடியை கையிலெடுத்து 48 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 85 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அரையிறுதி போட்டியில் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட – ஹசன் அலி உருக்கமான பதிவு

இறுதிப்போட்டியில் அனைவரும் பிரஷரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் அந்த பொறுப்பை எடுத்து அதிரடியாக அடித்து நொறுக்கினார். அதுமட்டுமின்றி சேசிங்கின் போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்திலும் எந்தவித பதட்டமோ, கோபமோ எதையும் வெளிப்படுத்தாமல் அவர் நிதானமாக அணியை வழிநடத்தியது, பிரஷரை கையாண்டது என அவரது செயல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement