வார்னரா ? வில்லியம்சனா ? யார் சன் ரைசர்ஸ் கேப்டன் – அதிகாரபூர்வ அறிவிப்பு

VVS
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.

warnerfier

- Advertisement -

இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியில் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓர் ஆண்டு தடைக்கு பின் சன் ரைசர்ஸ் அணியில் இணைந்த வார்னர் ஏற்கனவே அந்த அணியை வழிநடத்தியவர். கடந்த ஆண்டு வில்லியம்சன் அந்த அணியை வழிநடத்தினார். எனவே தற்போது இவர்கள் இருவரில் யார் அணியை வழிநடத்த போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான விடையை அந்த அணியின் ஆலோசகர் லஷ்மண் தெரிவித்தார்.

அதில் லஷ்மண் கூறியதாவது : வார்னர் எங்கள் அணிக்காக கோப்பையை கைப்பற்றிய கேப்டனாவார். வார்னரின் திறமை அபரிவித்தானது. அதேபோன்று சென்ற ஆண்டு ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக வில்லியம்சன் செயல்பட்டார். எனவே, அதன் தொடர்ச்சியாக வில்லியம்சன் அணியின் கேப்டனாக செயல்பட எங்கள் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று அணி வீரராக களமிறங்க வார்னரும் தயாராகிவிட்டார் என்று லஷ்மண் கூறினார்.

Kane-Williamson

இந்த தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியில் அனைத்து வீரர்களும் தற்போது அந்த அணியில் இணைந்து விட்டனர். சாகிப் அல் ஹசன், ரஷீத் கான், முஹம்மது நபி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இணைந்து உள்ளனர். மேலும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேரிஸ்டோவும் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement