அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் தற்போது டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த கேப்டன்சி விலகல் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணிக்காக மிகச் சிறப்பான கேப்டன்சி செய்து வந்த அவரது தலைமையின் நியூசிலாந்து அணி ஐசிசி கோப்பைகளை தவற விட்டிருந்தாலும் மிகப்பெரிய தொடர்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.
இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் எதிர்காலத்தினை மனதில் வைத்து தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
மேலும் நியூசிலாந்து அணிக்காக நான் தொடர்ச்சியாக விளையாடவும் காத்திருக்கிறேன். அதேபோன்று வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட நான் முடிவு செய்துள்ளேன். அதனால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை என்னால் ஏற்க முடியாது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது விலை மதிப்பில்லாதது. கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது அவர்களுடன் இருப்பதும் முக்கியமாக உள்ளது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கேரி கிறிஸ்டன் சொன்னது உண்மையா இருந்தா அந்த வீரர்களை தண்டித்தே ஆகனும் – முன்னாள் பாக் வீரர் கருத்து
பொதுவாக மத்திய ஒப்பந்த பட்டியலில் இருக்கும் வீரர்களுக்கே தேசிய அணியில் வாய்ப்பு கொடுக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கேன் வில்லியம்சன் மகத்தான வீரர் என்பதால் ஒப்பந்த பட்டியலில் இல்லையென்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



