- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன் – என்ன காரணம்?

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் கடந்த 2010-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 175 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி சார்பாக அதிக சதங்கள் அடித்த வீரராகவும், அதிக ரன்களை குவித்த வீரராகவும் அவரே முதலிடத்தில் இருக்கிறார். அதோடு ஐ.பி.எல் போட்டிகளில் கடந்து 2015-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 79 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேன் வில்லியம்சன் :

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் தனது 35-வது வயதில் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக முக்கிய அறிவிப்பு ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

நான் கடந்த சில நாட்களாகவே ஓய்வு குறித்த முடிவினை தீவிரமாக யோசித்து வந்தேன். அந்த வகையில் தற்போது நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இப்படி நான் ஓய்வு பெறுவதற்கு காரணம் யாதெனில் : நான் ஓய்வு பெற்ற பிறகு இளம் வீரர்கள் அணிக்குள் வந்து இன்னும் எங்களது அணியை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளேன்.

தற்போது இதிலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் எனவே நிச்சயம் இன்னும் ஸ்பெஷலான தருணங்கள் வர காத்திருக்கின்றன. என்னுடன் இந்த கரியரில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமான ஒரு பதிவை கேன் வில்லியம்சன் வெளியிட்டுள்ளார். அவரது இந்த ஓய்வு முடிவுக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோஹித் சர்மா – நிகழ்த்தப்போகும் சாதனை

கேன் வில்லியம்சன் ஒரு ஸ்பெஷல் வீரர் மட்டுமின்றி ஒரு ஸ்பெஷல் மனிதர். அவருடன் நான் சிறிய காலம் மட்டுமே பணியாற்றிய இருந்தாலும் மிகச் சிறப்பான நட்பை அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நியூசிலாந்து கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளது எங்களுக்கு வருத்தம் தான் இருந்தாலும் அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -