சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகல் – புதிய கேப்டன் நியமனம்

Warner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த 14வது ஐபிஎல் தொடர் தற்போது முதல் கட்டத்தை முடித்துவிட்டு இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மோசமான தொடராகவே மாறியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட போட்டிகளில் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணி மீதி நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

srh

இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது. இதன் காரணமாக 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் ஒரே போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் புள்ளி பட்டியலில் பின்தங்கியது மேதுமின்றி அந்த அணி சமூகவலைதளத்தில் அதிகளவு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக டேவிட் வார்னர் கடந்த போட்டியின் பரிசளிப்பு விழாவின் போதே மனக் கசப்புடன் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது ஹைதராபாத் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் டேவிட் வார்னர் தலைமை பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் இனி எஞ்சியிருக்கும் போட்டியில் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார். இது நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அமுலுக்கு வருவதாக சன்ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி நாளைய நாளைய போட்டியில் மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Williamson

கேப்டன் மாற்றம் குறித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றும் டேவிட் வார்னர் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கான சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதால் இனிவரும் போட்டிகளிலும் தனது பங்களிப்பை வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement