நேற்றைய போட்டியில் வில்லியம்சன் விளையாடாததற்கு இதுவே காரணம் – விவரம் இதோ

Williamson

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி, மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியிலும் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல் சொதப்பல் ஆட்டம் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தார்கள்.

Shankar

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும். ஆனால் அதன் பிறகு வந்த வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைத் தோல்வி பெறச் செய்தனர். முதல் இரண்டு போட்டிகளில் கேன் வில்லியம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் மூன்றாவது போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவார் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பார்ப்புக்கும் மீறி நேற்றைய போட்டியிலும் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. ஆனால் சன் ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கேன் வில்லியம்சனை அணிக்குள் கொண்டு வரும் முடிவில் தான் இருந்தார். ஆனால், அந்த அணியின் பிசியோ, கேன் வில்லியம்சனுக்கு இன்னும் ஓய்வு தேவை என்று கூறியதால்தான் நேற்றைய போட்டியிலும் வில்லியம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வரும் ஹைதராபாத் அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன் இணைந்தால்தான் மிடில் ஆர்டர் வலுப்பெறும் என்பது அந்த அணி ரசிகர்களின் கருத்தாகும்.

- Advertisement -