கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் – வெளியான அதிர்ச்சி தகவல்

Richardson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பி உள்ளது. தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரிலும் ஆஸ்திரேலிய அணி தற்போது பங்கேற்க உள்ளது.

richardson 2

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய தினம் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பயிற்சியை தொடர்ந்தனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் தொண்டைப்பகுதியில் தான் அசௌகரியமாக உணர்வதாகவும் தொண்டைப் பகுதி சரி இல்லை எனவும் அணி மருத்துவக் குழுவிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அந்த முடிவுகள் வரும் வரை அவர் வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் மருத்துவ குழு அளித்த தகவலில் :

richardson 1

ரிச்சர்ட்சன் தொண்டையில் வறட்சி இருப்பதாக தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி அவரை நாங்கள் தனிமைப்படுத்தி உள்ளோம். சுமார் 14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியதை அடுத்து இவருக்கு இது போன்ற உடல் உபாதை ஏற்பட்டதால் இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த வைரஸ் இருப்பது உறுதியானால் உரிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் காரணமாக முன்னேற்பாடாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் இன்று வெறும் வீரர்களை மட்டும் வைத்து நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரிலும் வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 14 தேதி வரை பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement