போனை கையில் வைத்து காத்திருக்கிறேன். ஐ.பி.எல் நடக்குமா ? இல்லையா ? – ஆதங்கமாக பேசிய ஆஸி வீரர்

Richardson
- Advertisement -

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய பீதியின் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் தற்போது வரை இந்த கோர வைரஸை தடுத்து நிறுத்த எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து தற்போது வரை எந்த ஒரு அரசாங்கத்திடமும் தெளிவான பார்வை இல்லை.

Ipl cup

- Advertisement -

இந்த வைரஸ் தாக்கத்தினால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் உலகின் பல விளையாட்டுகளில் உள்ள முன்னணி வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வரவில்லை.

இதே ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் 17 வீரர்கள் விளையாட இருந்தனர். தற்போது ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே அனைத்து வீரர்களும் முடங்கியுள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 24 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு கரொனா பரிசோதனை செய்யப்பட்டது இவருக்கு கரோனா வைரஸ் இல்லை என்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

richardson 1

இந்நிலையில் ஐ.பி.எல் தொடர் குறித்து அவர் கூறியதாவது : ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த வைரஸ் ஒரு மாதம் அல்லது சில வாரங்களில் சரியாக வாய்ப்பு உள்ளது. அதுவரை நான் எனது மொபைல் போனை வைத்துக்கொண்டு தனியாக இருக்க வேண்டும். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதுகுறித்து சேட்டிங் செய்து வருகிறோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போதும் கூட நாங்கள் இதுபற்றி நினைக்கவில்லை. ஆனால் தற்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறினார் கேன் ரிச்சர்ட்சன்.

சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது என்று இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? அல்லது ரத்து செய்யப்படுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement