இம்முறை டி20 உலககோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் – கம்ரான் அக்மல் பேட்டி

Kamran
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த ஏழாவது உலகக்கோப்பை டி20 தொடரானது இங்கு வீசி வரும் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துவங்கிய நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை தொடர் ஆனது திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இம்முறை டி20 உலக கோப்பையில் நிச்சயம் பாகிஸ்தான் அணி கைப்பற்றும். ஏனெனில் கடந்த 9 10 ஆண்டுகளாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் தாய் மண்ணாக வைத்து பாகிஸ்தான் அணி தொடர்ந்து அங்கு போட்டிகளில் விளையாடி வருகிறது. அதனால் அந்த மைதானத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்கு தெரியும்.

Pak-1

அதே போன்று இந்திய அணிக்கும் அங்கு நல்ல அனுபவம் உள்ளதால் அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடர் தற்போது கடந்த இரு ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வருவதால் இந்திய அணி வீரர்களும் சரி, ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் சரி அங்கு நடைபெறும் இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

Pakistan 1

ருப்பினும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தான் கருதுவதாக கமரன் அக்மல் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் தொடர்ந்து பேசிய அவர் முன்னணி அணிகளைத் தாண்டி ஆப்கானிஸ்தான் அணி இம்முறை இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement