இந்திய அணிக்கு அருகே அங்க நிக்க பாகிஸ்தானுக்கு தகுதியில்ல.. ஐபிஎல் மாதிரி இருந்துச்சு.. கம்ரான் அக்மல் சாடல்

Kamran Akmal
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதையும் சேர்த்து 3 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. முன்னதாக அத்தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.

அங்கே ஒரே மைதானத்தில் விளையாடியது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகத்தைக் கொடுத்ததாக நிறைய விமர்சனங்கள் காணப்பட்டன. அவையெல்லாம் ஒருபுறம் இருக்க விருதுகள் வழங்கும் விழாவில் பாகிஸ்தானை சேர்ந்த யாருமே இல்லாதது மற்றொரு விமர்சனத்தை எழுப்பியது. குறிப்பாக விருது மேடையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர், செயலாளர் மற்றும் நியூசிலாந்து வாரியத்தின் முக்கிய நிர்வாகி மட்டுமே இருந்தனர்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு தகுதியில்ல:

பாகிஸ்தானை சேர்ந்த எந்த நிர்வாகியும் இல்லை. ஆனால் தொடரை நடத்தும் நாடு என்ற உரிமையின் அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் விருது வழங்கும் விழாவில் பங்கேற்காதது ஏன்? ஒருவேளை ஐசிசி அழைக்கவில்லையா? அல்லது இந்தியா வென்றதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அந்த விழா மேடையில் இந்திய அணியின் அருகில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிற்க தகுதியற்றவர்கள் என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சாடியுள்ளார்.

ஏனெனில் அமெரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளிடம் கூட தோற்கும் அளவுக்கு பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கம்ரான் அக்மல் பேசியது பின்வருமாறு. “ஐசிசி நமக்கு கண்ணாடியை காண்பித்துள்ளது. தொடரை நடத்தும் இயக்குனர் சுமைர். ஆனால் அவர் கூட விழா மேடையில் இல்லை”

- Advertisement -

இது ஐபிஎல் அல்ல:

“ஏன் அவர் மேடையில் இல்லை? ஏனெனில் நாம் அங்கே இருக்கும் தகுதியைப் பெறவில்லை. நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. கத்துக்குட்டி அணிகள் நமது நிலைமையை கண்ணாடியில் காண்பித்தன. இந்தத் தொடரை பாகிஸ்தான் எவ்வாறு நடத்தியது என்பதைப் பற்றி யாரும் விவாதிக்கவில்லை. நாம் அது போன்ற கிரிக்கெட்டை விளையாடுவதாலேயே இப்படி நடத்தப்படுகிறோம்”

இதையும் படிங்க: அவங்க 2 பேர் இந்திய அணியில் இருக்கும் வரை எதிரணியினர் இந்தியாவை பாத்தாலே பயப்படுவாங்க – திலீப் வெங்சர்க்கார்

“நீங்கள் நாட்டுக்காக அல்லாமல் உங்களுக்காக விளையாடுகிறீர்கள். அதனாலேயே இவ்வாறு மதிக்கப்படுகிறீர்கள். அதே சமயம் இது எங்கள் தொடர். நாங்கள் நடத்தினோம். எனவே இறுதிப் போட்டியின் இடைவெளியில் ஃஅடிப் ஆலம் போன்ற எங்கள் நாட்டைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சி இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில் இருந்து எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. மாறாக அது துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் போல் அமைந்தது” என்று கூறினார்.

Advertisement