ஒழுக்கமா எப்படி நடந்துக்குறதுனு இந்திய வீரரான இவரை பார்த்து கத்துக்கோ – கம்ரான் அக்மல் அட்வைஸ்

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் உமர் அக்மல் இவர் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி மூன்றாண்டுகள் தடைக்காலம் பெற்றுள்ளார். இவரது அண்ணன் கம்ரான் அக்மலும் கிரிக்கெட் வீரர்தான். இவரும் பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். பொதுவாக இருவருமே பாகிஸ்தான் அணிக்கு ஆடிய காலகட்டத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் உமர் அக்மல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த போது அவரை சூதாட்டம் செய்ய வெளிநாட்டைச் சேர்ந்த சூதாட்ட தரகர்கள் அணுகி அழைத்திருக்கிறார்கள். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியாமல் உமர் அக்மல் மறைத்திருக்கிறார். இதனால் அவர்மீது சூதாட்ட புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டது.

அதனை தாண்டி உடற்தகுதி தேர்வின்போது தேவையில்லாத செய்கைகளை பாகிஸ்தான் பயிற்சியாளர்களிடம் செய்து காட்டியிருக்கிறார். இந்த அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Akmal

இந்நிலையில் அவரது அண்ணன் கம்ரன் அக்மல், தம்பிக்கு சப்போர்ட் செய்துள்ளார். மேலும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும் கூறியுள்ளார். அதனை தாண்டி இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை என்பதையும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

எனது தம்பிக்கு நான் அறிவுரை கூறலாம். ஆனால் தவறில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒவ்வொருவரும் தவறு செய்வார்கள், மற்றவர் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். விராட் கோலியிடமிருந்து இதனை நிறைய கற்றுக்கொள்ளலாம். ஐபிஎல் தொடக்க காலத்தில் விராட்கோலி மாறுபட்ட வீரராக இருந்தார். அதன் பின்னர் அவர் தான் முறையை மாற்றிக் கொண்டார்.

Kohli-1

அவர் எப்படி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக மாறினார் என்பதை பார்க்க வேண்டும். அதன்பின் தோனியையும் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் எப்படி அணியை வழி நடத்தினார் என்பதை பார்த்தால் நமக்கு தெரியும். சச்சின் டெண்டுல்கரும் எப்போதும் சர்ச்சையில் இருந்து விலகியே இருந்தார்.

Umar-Akmal

இவர் போன்ற வீரர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் தான் நமக்கு தலை சிறந்த உதாரணம் என்று தனது தம்பிக்கு அறிவுரை கூறியுள்ளார் கம்ரான் அக்மல்.

Advertisement