- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தொட்டதெல்லாம் தங்கமாகும் கம்பீருடன் அந்த இந்திய ஜாம்பவானை பவுலிங் பயிற்சியாளரா போடுங்க.. கம்ரான் அக்மல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவருடைய பதவி காலம் 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ ஏற்கனவே வரவேற்றது. அதில் 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் கெளதம் கம்பீரை அடுத்த பயிற்சிகளாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

ஏனெனில் 2007, 2011 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் இம்முறை ஆலோசகராக செயல்பட்டார். அவருடைய தலைமையில் 10 வருடங்கள் கழித்து 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வென்றது.

- Advertisement -

தொட்டதெல்லாம் தங்கம்:
அந்த வகையில் தரத்திலும் அனுபவத்திலும் உயர்ந்து விளங்குவதன் காரணமாக கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்குப் பின் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு மிகவும் சரியானவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாம்பவான் ஜஹீர் கானை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கம்பீர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியுள்ளது. அவர் இணையும் அணிகள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை. அவர்களிடம் ஏற்கனவே நிறைய தேர்வுகள் இருக்கிறது. ராகுல் டிராவிட்டுக்குப் பின் கௌதம் கம்பீரை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது”

- Advertisement -

“மிகப்பெரிய வீரரான அவர் சிறந்த பயிற்சியாளராகவும் வருவார். அவர் தான் இந்திய அணிக்கு தற்போது சிறந்த தேர்வாக இருக்கிறார். அவருடைய தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நன்றாக விளையாடியது. இந்த வருடம் ஆலோசகராக வந்ததும் அவருடைய தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. மிகச் சிறப்பாக திட்டமிடக்கூடிய அவரிடம் கிரிக்கெட்டை பற்றிய புத்திசாலித்தனமான மனநிலை இருக்கிறது”

இதையும் படிங்க: 2027 வரைக்கும் அவர்தான் இந்திய அணியின் கேப்டன்.. கவுதம் கம்பீர் வலியுறுத்திய – அந்த வீரர் யார் தெரியுமா?

“நானும் அவருடன் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். இப்போதும் நண்பர்களாக உள்ள நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். எனவே அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட சிறந்தவர். தேவைப்பட்டால் ஜாகிர் கான் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரை இந்தியா பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கலாம்” என்று கூறினார் இந்த சூழ்நிலையில் தமக்குத் தகுந்த துணைப் பயிற்சியாளர்களையும் தேர்ந்தெடுக்க கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ உரிமை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -