இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருகிறது. எனவே இன்னும் சில தினங்களில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்கிற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை தீவிரப்படுத்திய வேளையில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றிய கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கம்பீரே அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று அதிகளவு தகவல்கள் வெளியாகின.
மேலும் பி.சி.சி.ஐ சார்பில் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட பின்னர் நேற்று நடைபெற்ற நேர்காணலில் கௌதம் கம்பீர் கலந்து கொண்டு முறைப்படி பிசிசிஐ செயல்பாட்டு நடைமுறைகளில் பங்கேற்றுள்ளார். அதோடு இன்று இரண்டாம் நாள் நேர்காணலும் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மற்ற நபர்களை விட கவுதம் கம்பீரே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் இவ்வேளையில் கிட்டத்தட்ட அவர் பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய பயிற்சியாளராக அவர் பொறுப்பினை ஏற்கும் பட்சத்தில் 2027-ஆம் ஆண்டு வரை மூன்று வகையான இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே பி.சி.சி.ஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த கம்பீர் சில நிபந்தனைகளுடனே அவர் பதவிக்கு விண்ணப்பிப்பேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி நடக்கும் பார்படாஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
அந்த வகையில் கௌதம் கம்பீரின் நிபந்தனங்களில் இதுவும் ஒன்றாக இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரோகித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



