தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க.. அர்ஷ்தீப்பை பற்றிய கிண்டலுக்கு.. ஹர்பஜனிடம் மன்னிப்பு கேட்ட கம்ரான் அக்மல்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அட்டகாசம் செய்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பந்து வீச்சில் கில்லியாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். முன்னதாக அந்தப் போட்டிக்கு ஏஆர்ஒய் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி வர்ணனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கம்ரான் அக்மல் போன்ற சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் வல்லுனர்களும் பங்கேற்றனர்.

- Advertisement -

வெளிப்படையான மன்னிப்பு:
அந்த நிகழ்ச்சியில் உள்ளூர் நேரப்படி சுமார் 12 மணியளவில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் ஒரு ஓவரை வீசினார். அப்போது அவருடைய சீக்கிய மதத்தை கிண்டலடிக்கும் வகையில் கம்ரான் அக்மல் நேரலையில் பேசியது பின்வருமாறு. “எது வேண்டுமானாலும் நடக்கலாம். கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசலாம். அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பது போல் தெரியவில்லை. ஏற்கனவே 12 மணியாகி விட்டது” என்று கூறினார்.

அப்போது அருகில் இருந்த பாகிஸ்தான் வல்லுனர் ஒருவர் கூறியது பின்வருமாறு. “12 மணிக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்பை ஒரு சீக்கியருக்கு வழங்கக்கூடாது” என்று கூறினார். அதாவது அர்ஷ்தீப் சிங் சீக்கிய மதத்தை சேர்ந்தவர். எனவே இரவு 12 மணிக்கு சீக்கியர்கள் சாதாரணமாக நடந்து கொள்வதில்லை என்று அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் பேசினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

அதைப் பார்த்த ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட்டரில் விமர்சித்தது பின்வருமாறு. “உங்கள் மோசமான வாயை திறப்பதற்கு முன்பாக சீக்கியர்களின் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கம்ரான் அக்மல். படையெடுப்பாளர்களால் கடத்தப்பட்ட போது இரவு 12 மணி என்று பார்க்காமல் சீக்கியர்களான நாங்கள் தான் உங்களுடைய அன்னையர் மற்றும் தங்கையர்களை காப்பாற்றினோம். எனவே இந்த கருத்தை கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். கொஞ்சம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நீங்க செய்ஞ்சது தப்பு தான்.. தமிழக அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் – ஐ.சி.சி தண்டனை விதிப்பு

இதைத்தொடர்ந்து தம்முடைய தவறை உணர்ந்த கம்ரான் அக்மல் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பின்வருமாறு. “எனது சமீபத்திய கருத்துகளுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கிய சமூகத்திடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். எனது வார்த்தைகள் பொருத்தமற்றதாகவும் அவமரியாதையாகவும் இருந்தன. உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை. உண்மையாக வருந்துகிறேன்” என்று கூறினார்

Advertisement