நீங்க செய்ஞ்சது தப்பு தான்.. தமிழக அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் – ஐ.சி.சி தண்டனை விதிப்பு

Wade
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போது ஐசிசி-யின் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவின் 17-ஆவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஆஸ்திரேலிய அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட்டுக்கு ஐசிசி தண்டனை வழங்கி அதிரடி காட்டி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத் பந்துவீசும் போது ஒரு பந்தை கவனிக்காமல் தவிர்த்து விட்டு நின்றார்.

- Advertisement -

ஆனால் அம்பயர் அந்த பந்திற்கு டெட்பால் கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த வேட் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐசிசி விதிமுறைப்படி களத்தில் அம்பயரிடம் இதுபோன்று வாக்குவாதம் செய்வது தவறு என்பதனால் அவருக்கு இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : பெயர்லயே பயம் இருக்கு.. அந்த இந்திய வீரரை பாத்தாலே எதிரணி பயப்படுறாங்க.. வாக்கார் யூனிஸ் பாராட்டு

மேலும் இன்னொரு தகுதி இழப்பு புள்ளியை அவர் பெற்றால் ஒரு சில போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போகும் நிலை கூட வரலாம். மேலும் இந்த போட்டி முடிந்த பின்னர் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறுதான் என்று ஒப்புக்கொண்டதால் அவருக்கு போட்டி ஊதியத்தில் எந்தவித அபாரமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement