தோனியை ஓரம்கட்ட நினைக்க வேண்டாம். அவரை நீக்கினால் நஷ்டம் உங்களுக்குத்தான் – முகமது கைப் ஓபன் டாக்

Kaif

சமீபகாலமாகவே தோனி குறித்த செய்திகள் இணையத்தில் அதிகம் வலம் வரத் தொடங்கியுள்ளன. மேலும் தங்களுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து கூறினாலும் அதில் தோனியுடன் நடைபெற்ற ஒரு விஷயத்தையாவது சேர்த்து பேசத்தான் செய்கிறார்கள். அது மட்டுமின்றி கேள்வியை தொகுப்பவர்கள், செய்தியாளர்கள் மற்றும் இணைய பேட்டி என அனைத்திலும் தோனியை முன்வைத்து ஒரு கேள்வியாவது கேட்கப்படுகிறது.

Dhoni

அதனால் தோனி குறித்த கருத்தை பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் பிடித்து தனது கருத்தினை அளித்துள்ளார். அதில் கூறியதாவது : தோனிக்கு மாற்று வீரர் என்பதே கிடையாது. அவரின் இடத்திற்கு நாம் இப்போது வரை எத்தனையோ பேரைப் பயன்படுத்தி பார்த்து விட்டோம்.

ஆனால் தோனியின் இடத்தை நிரப்ப முடியவில்லை. அதே போல் கேஎல் ராகுல் அணிக்கு நிரந்தர விக்கெட் கீப்பராக நாம் செயல்பட வைக்ககூடாது. ஏனெனில் அவர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் அணிக்கு எப்போது நிரந்தர விக்கெட் கீப்பர் வருகிறாரோ அப்போது ராகுலை கீபிங் பணியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் விக்கெட் கீப்பர் காயம் அடைந்தால் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் போன்றவர்கள் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. மேலும் தொடர்ந்து பேசிய கைப் இப்போது நாம் சச்சின் டிராவிட் போன்றோருக்கு மாற்றாக கோலி, ரகானே, புஜாரா ஆகியோரை சொல்கிறோம். அவர்களும் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பி விட்டார்கள். ஆனால் தோனியின் இடம் அப்படி அல்ல.

- Advertisement -

நான் இப்போதும் சொல்கிறேன் அவர் தான் உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பர். அவர் இப்போதும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவரை விரைவாக ஓரங்கட்ட நினைக்கக்கூடாது என்று கைப் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கும் தோனி மீண்டும் டி20 உலகக்கோப்பை அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

dhoni with pant

இந்நிலையில் கொரோனா வைரசினால் அவர் அணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய அணிக்காக விளையாடி 10 மாதங்களுக்கு மேல் ஆவதால் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தோனியின் எதிர்காலம் கேள்விக்குறியில் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.