கோலிக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக இருக்க இவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது – முகமது கைப் ஓபன் டாக்

Kaif

கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முஹம்மது கைப் இன்றைய Helo Liveவில் முதல் முறையாக பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்:

Kaif

1) எதிர்காலத்தில் இந்தியாவிற்கு இன்னொரு விக்கெட் கீப்பர் அவசியம். ராகுல் இதுவரை பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். ஆனால் அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பராக இருக்கக்கூடாது. அவர் மாற்று விக்கெட் கீப்பர் ஆகவே இந்திய அணியில் இருந்தால் நல்லது.

2) இந்தியாவின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் வெளிப்படையாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு வீரர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை நீங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் தெளிவாக கூறப்படுகின்றன. அதே போன்று இந்தியாவிலும் கூறவேண்டும்.

தேர்வுக் குழுவிற்கும் வீரர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அது விலகி இருக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் வீரர்களின் தேர்வில் வெளிப்படையாக இருக்கவேண்டும்.

3) யுவராஜ் சிங்கின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகளை நான் நம்பவில்லை. ஆனால் யுவ்ராஜ் சிங் ஒரு சிறந்த வீரர். வீரர்களுக்கு கேப்டன்கள் இடையே ஒருங்கிணைப்பு தேவை. இருவருக்கும் பரஸ்பர பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

- Advertisement -

4) ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டனாக இருப்பதற்கான அனைத்து திறன்களும் கொண்டவர். ஆனால் ரோஹித் சர்மாவிற்கு கேப்டனாக போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

5) விராட்கோலி ஒரு நல்ல கேப்டன் அவர் எந்த ஒரு பெரிய கோப்பைகளையும் வெல்லவில்லை விராட் கோலி தனது அணியை சரியாக தயார் செய்து நம்பினால் கோப்பையை வெல்ல முடியும். அதே நேரத்தில் அணித்தேர்வில் கோலி மிகவும் வாதம் கொண்டவர். இதனால் அணியில் நிறைய மாற்றங்கள் உள்ளன.

6) கோலி தனது வீரர்களை ஆதரிக்கவேண்டும். தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் கோலி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக இருப்பார் என்று கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.