ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சர்ச்சைக்குரிய வீரர்…ஏன் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

rabada
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரபேடா.இந்த ஐபிஎல் சீசனுக்காக ரபேடாவை 4.2 கோடி ரூபாய் தந்து ஏலம் எடுத்திருந்தது டெல்லி அணி.சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நான் டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

rabada3

- Advertisement -

நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்று தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதை நான்கு டெஸ்ட்போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரபேடா தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது ரபேடா கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார்.இந்நிலையில் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் அவருக்கு மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

rabada2

ரபேடாவின் இந்த திடீர் விலகல் ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

Advertisement