25 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்த காகிசோ ரபாடா – ரசிகர்கள் வாழ்த்து

Rabada
- Advertisement -

14 ஆண்டுகள் கழித்து தென்ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தற்போது மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 220 ரன்கள் மட்டுமே எடுத்து தனது மொத்த விக்கெட்டையும் இழந்தது. பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது இந்த தொடரில் காண்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரர் டீன் எல்கர் மட்டும் 58 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி 377 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சீனியர் வீரர் பாவத் ஆலம் சதம் அடித்து அசத்தினார் இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 187 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 29 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இது போட்டியில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ரபாடா. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

rabada

மேலும், குறைந்த வயதில் மற்றும் குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலிலும் ககிசோ ரபடா இடம் பிடித்திருக்கிறார். இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்தவுடன் அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் திட்டமிடப்பட்டிருக்கிறது. 14 ஆண்டுகள் கழித்து ஒரு மதிப்புமிக்க சர்வதேச அணி பாகிஸ்தானில் ஆடுவது அந்த நாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

rabada

தென்ஆப்ரிக்க அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக அறிமுகமாகி தற்போது இந்த சாதனையை எட்டியுள்ளார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது 25 வயது மட்டுமே நிரம்பிய ரபாடாவால் நிச்சயம் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவு சாதனைகளை படைக்க முடியும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement