விராட், ரோஹித், புஜாராவுக்கு மரியாதை கொடுக்காத பிசிசிஐ செயல் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.. ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் செட்டேஸ்வர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 – 2023 வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2018/19, 2020/21 அடுத்தடுத்த தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வந்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு 37 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்த புஜாராவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா ஃபேர்வெல் போட்டியில் விளையாடி விடை பெறுவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட், ரோஹித், புஜாரா:

சொல்லப்போனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் ஃபேர்வெல் போட்டியில் விளையாடி ரசிகர்கள் முன்னிலையில் மரியாதையுடன் விடை பெறுவதற்கு தகுதியானவர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் தவிர்த்து பெரும்பாலான ஜாம்பவான் வீரர்களை ஃபேர்வெல் போட்டிகளை நடத்தாமல் மரியாதையின்றி பிசிசிஐ அனுப்பியது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய நாட்டுக்காக நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் சிறந்த கிரிக்கெட்டர். அதனால் நீங்கள் நல்ல வழியில் வழியனுப்பப்பட வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற போது தலைமை நிர்வாகத்திற்கும் அவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது என்று நம்புகிறேன்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“உண்மையில் அவர்களிடம் அவர்கள் பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி செய்வது விளையாட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல. விராட் கோலியின் ஓய்வும் இப்படித்தான் நடந்தது. அவரும் சிறந்த வழி அனுப்புதலுக்கு தகுதியானவர். அவரிடம் இன்னும் 2 வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் திறமை இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து தொடர் சமனில் முடிந்ததால் அந்தப் பேச்சுக்கள் நின்று போனது”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – அர்ஷ்தீப் சிங்

“இருப்பினும் விராட் கோலி போன்ற வீரரை இந்தியா கண்டறிவதற்கு சற்று காலமாகும். அதே போல நீண்ட காலமாக விளையாடாத புஜாராவிடம் ஓய்வு திட்டங்கள் குறித்து பேசியிருக்க வேண்டும். அந்த வீரரும் தனது நேரம் முடிந்ததை உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அது நடந்திருந்தால் புஜாரா சிறந்த முறையில் வழி அனுப்பப்பட்டிருப்பார். இவை அனைத்தும் பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் வீரருக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை பொறுத்தது” என்று கூறினார்.

Advertisement