இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆசிய கோப்பை 2025 தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் ஜெய்ஸ்வாலை கழற்றி விட்டு சுப்மன் கில்லை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவினர் விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன.
உடனே சுப்மன் கில் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக 754 ரன்கள் அடித்த அவர் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டனாக இருக்கும் அவர் 2023 சீசனில் 890 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
திடீர்னு எப்படி வந்தார்:
அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை டி20 அணியிலும் விளையாட வைக்க வேண்டும் என்பது ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் இதற்கு முன் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடத் தடுமாறினார். மறுபுறம் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி சதங்களை அடித்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அசத்தினார்கள்.
அதனால் எப்படி அவருக்கு திடீரென வாய்ப்பளிக்க முடியும்? என்பது மற்றொரு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் இடம் பெறாத கில் திடீரென எங்கிருந்து வந்தார்? என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீகாந்த் கேள்வி:
சுப்மன் கில்லை திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வைக்க வேண்டுமென ஆதரவளிப்பவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “ஒருவேளை சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாக இருந்தால் தாமாக பிளேயிங் லெவனில் இருப்பார். அதனால் ஜெய்ஸ்வால் அணியில் இருக்க மாட்டார். ஜெய்ஸ்வால் அல்லது வைபவ் சூர்யவன்சி ஆகியோருடன் கில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவார்”
இதையும் படிங்க: பும்ரா டாக்டர்ஸ் சொல்றத கேட்பதே சரி.. இந்தியா கண்டிப்பாக அந்த கோப்பையை வெல்லும்.. சேட்டன் சர்மா
“ஆனால் கில் கடந்த டி20 உலகக் கோப்பையின் அங்கமாக இல்லை. அப்படிப்பட்டவர் திடீரென தற்போது எங்கிருந்து வந்தார்? கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட அவர் இல்லை. ஆம் சமீப காலங்களில் அவர் சிறப்பாக விளையாடினார். அதை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் திடீரென அணியின் தேர்வுகளில் முடிவு எடுக்க முடியாது” என்று கூறினார்



