இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து. 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மிகவும் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பவுலிங் செய்தார். அதனால் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று பலரும் கணித்தார்கள். ஆனால் 2018இல் டெஸ்ட் கிரிக்கட்டில் அறிமுகமான பும்ரா இன்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார்.
கடந்த 8 வருடங்களில் அவர் இந்தியாவின் நிறைய மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக வெளிநாடுகளில் மிகவும் அபாரமாக செயல்படும் பும்ரா 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையை படைத்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முகமது சிராஜ் உட்பட மற்ற அனைத்து பவுலர்களும் தடுமாறினர்.
டாகடர் சொல்வதே சாரி:
அப்போது அவர்களுக்கும் சேர்த்து தனியாளாக ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக பந்து வீசிய பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதே காரணத்தால் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த அவர் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனால் இங்கிலாந்தில் தம்மால் 3 மட்டுமே விளையாட முடியும் என்பதை அவர் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார்.
துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி காணவில்லை. அதனால் இதற்கு முன் பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மறந்து இந்தியாவைச் சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் பும்ராவை விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சிலர் முடிந்தால் முழுமையாக விளையாடுங்கள், இல்லையேல் ஓய்வெடுங்கள் என்று சொல்லாத குறையாக பும்ராவை விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா மருத்துவர்கள் ஆலோசனைப்படி 3 போட்டிகளில் விளையாடியதே சரியானது என்று சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா வெல்லும்:
முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவரான அவர் 2025 ஆசிய கோப்பையை இந்தியா வெல்லும் என்றும் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மருத்துவக் குழுவினர் என்னிடம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னால் நான் அதை செய்தாக வேண்டும். எங்களுடைய உடற்பயிற்சியாளர் பணிச்சுமையை நிர்வகிக்குமாறு சொன்னால் அதை நான் கேட்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியாவின் நலனுக்காக ஜஸ்ப்ரித் பும்ரா இதை செய்யலன்னா.. டெஸ்ட் நகர்ந்து போய்டும்.. கவாஸ்கர் வெளிப்படை
“ஏனெனில் அவர்களே சிறந்த மதிப்பீட்டாளர்கள். நம்முடைய நாட்டுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறந்தவர் என்பது எனக்குத் தெரியும். தற்போது நாம் விளையாடும் கிரிக்கெட்டுக்காக பெருமைப்படுகிறேன். குறிப்பாக இங்கிலாந்தில் நாம் அசத்தினோம். அந்த தன்னம்பிக்கையால் ஆசிய கோப்பையை நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனெனில் அதன் பின் விரைவில் இந்தியாவில் (2026) டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது” என்று கூறினார்.



