நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் முழுமையான ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
அதனால் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று சில ரசிகர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையே 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட முயற்சிப்பார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தைரியம் இருக்கு:
ஒருவேளை ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடவில்லையெனில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “100% இப்போதே நீங்கள் ஆஸ்திரேலிய தொடரை பற்றி சிந்திப்பீர்கள். அதில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லெனில் தமக்கு தாமே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன்”
“ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விடைபெற்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவார். அவரும் வயதாகிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இனிமேல் அவரால் இளமையாக முடியாது. ரோஹித் சர்மாவுக்கு குறைந்தபட்சம் தைரியம் இருக்கிறது. இந்த தொடரில் நான் சிறப்பாக விளையாடாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தேன் என்பதை ஒப்பு கொண்டதற்கு அவருக்கு பாராட்டுக்கள்”
ஆஸ்திரேலிய தொடர்:
“அது சிறப்பான விஷயம். அதுவே ஒரு வீரர் மீண்டும் ரிதத்துக்கு வருவதற்கான முதல் வழி. உங்களுடைய தவறை ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியம். அதுவே நல்ல மனிதனாகவும் இருப்பதற்கு மிகவும் முக்கியமான விஷயம். அப்படி தனது தவறை ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா மீண்டு வருவதற்கான வழியில் இருக்கிறார் என்பது என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இதுக்கு தானே புஜாரா, ரஹானேவை வீட்டுக்கு அனுப்புனீங்க.. இந்தியாவின் தோல்வி காரணத்தை விமர்சித்த கவாஸ்கர்
அவர் கூறுவது போல தற்போது 37 வயதை தொட்டுள்ள ரோகித் சர்மா சிறப்பாகவே விளையாடினாலும் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி கண்டு 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றால் அவர் தொடர்ந்து விளையாடக் கூடும். இல்லையேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.