இதுக்கு தானே புஜாரா, ரஹானேவை வீட்டுக்கு அனுப்புனீங்க.. இந்தியாவின் தோல்வி காரணத்தை விமர்சித்த கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியினர் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள், டி20 போல விளையாடியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான பொறுமையுடன் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடாததே தோல்விக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி பொறுமையுடன் விளையாடிய புஜாரா, ரகானேவை பிசிசிஐ வீட்டுக்கு அனுப்பியதாகவும் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:

“சிறிய பவுண்டரிகளுடன் கூடிய மைதானத்தில் பெரிய பேட்டை வைத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் 3 – 4 டாட் பந்துகளை எதிர்கொண்டதும் பெரிய சாட் அடிக்க முயற்சிப்பதே பிரச்சனை என்று நினைக்கிறேன். அது ஸ்விங், வேகம், சீம், சுழல் இல்லாத வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வேண்டுமானால் வேலை செய்யும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் புதிதாக களத்திற்கு வருபவருக்கு வேலை செய்யாது”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களுக்கு பொறுமை தேவை. ஆனால் நவீன கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதை நம்புவதில்லை. சொல்லப்போனால் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வேகமாக விளையாட வேண்டும் என்ற சிந்தனை உருவாகியுள்ளது. அதனால் அவர்கள் பவுலர்களை கலைப்படைய வைக்க அல்லது சூழ்நிலை முன்னேறும் வரை காத்திருக்க விரும்புவதில்லை”

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

“அதனாலேயே புஜாரா, ரஹானே ஆகியோருக்கு இந்திய அணியில் எந்த திட்டமும் இல்லை. புஜாரா ஆஸ்திரேலிய பவுலர்களை சோர்வடைய வைத்தார். ரஹானே சோர்வடைந்த ஆஸ்திரேலிய பவுலர்களை பொறுமையுடன் எதிர்கொண்டு தேவையான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அது போன்ற சிந்தனைகள் தற்போது இந்திய அணியில் இல்லை”

இதையும் படிங்க: பும்ரா இல்ல.. ரோஹித்துக்கு பின் அவரை கேப்டனா போடுங்க.. ஜாம்பவானா வருவாரு.. கைப் கோரிக்கை

“இங்கிலாந்து வீரர்கள் இப்போதெல்லாம் பந்தை காட்டுத்தனமாக அடிக்கும் முறையை பின்பற்றுகிறார்கள். அதைப் பின்பற்றி அவர்கள் வெளிநாடுகளில் மோசமாக தோற்கிறார்கள்” என்று கூறினார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற 4 போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement