- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவருக்கு இதான் கடைசி உலகக் கோப்பைன்னு யார் சொன்னா? அது வரைக்கும் விளையாடுவாரு.. ஸ்ரீகாந்த்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. முன்னதாக இதுவே இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க சீனியர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். அதனால் ஒரு கட்டத்தில் அவர்களை அவர்களை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்தது. ஆனால் கடந்த உலகக் கோப்பையில் பாண்டியா காயத்தை சந்தித்த நிலையில் ரோகித் தலைமையில் இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் ஆதரவு:
அதன் காரணமாக மீண்டும் இத்தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதால் கழற்றி விடப்பட வேண்டும் என்று விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி அனுபவத்தை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அற்புதமான ஃபிட்னஸ் வைத்திருக்கும் விராட் கோலி 2026 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

மேலும் நாட்டுக்காக இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா வெல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இது ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான கடைசி வாய்ப்பா? என்று கேட்டால் ஆம் இருக்கலாம். இந்த நேரத்தில் 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதை நினைவில் கொள்ளுங்கள்”

- Advertisement -

“அனைவரும் இந்தியாவில் விளையாட விரும்புவார்கள். என்னைப் பொறுத்த வரை விராட் கோலி வைத்திருக்கும் ஃபிட்னஸ் காரணமாக அவரால் 2026 வரை எளிதாக விளையாட முடியும். எனவே விராட் கோலிக்கு இது கடைசி வாய்ப்பு கிடையாது. ஆனால் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார். ஏனெனில் அவர் இன்னும் டி20 உலகக் கோப்பையை வென்றது கிடையாது”

இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிச்சு 2 வருஷத்துக்கு முன்னாடி அங்க விட்டதை இங்க பிடிப்போம்.. அயர்லாந்து கோச் உறுதி

“ரோஹித் சர்மா 2007இல் வென்றுள்ளார். அதனால் உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆர்வத்துடன் இருந்த அவர் 2023இல் தவற விட்டார். தற்போது அவர் கேப்டனாக டி20 உலகக் கோப்பையை பற்றி நினைப்பார். கேப்டனாக உலகக் கோப்பையை வெல்வது முக்கியம். அதனாலயே அனைத்து கோப்பைகளையும் வென்ற தோனி இவ்வளவு பேசப்படுகிறார். எனவே தம்மை தாண்டி நாட்டுக்காக ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையை வெல்ல விரும்புவார்” என்று கூறினார்.

- Advertisement -