இந்திய தொடர் முக்கியமில்ல. எங்களது லட்சியம் இந்த கோப்பையை ஜெயிப்பது தான் – ஆஸி பயிற்சியாளர் பேட்டி

Langer
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதும் மற்ற அணிகளுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை வலிமையாக நிலைநாட்டி நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அணி என்பது நாம் அறிந்ததே. மேலும் அதேபோன்று எப்பொழுதும் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதை தீவிரமாக நினைப்பவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்.

aus

- Advertisement -

தற்போது கூட டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது திடமான ஆட்டத்தை நல்ல வீரர்களை வைத்து அவர்கள் விளையாடி வருகின்றனர்.

ஆனாலும் கூட இதுவரை டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடியவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை ஐசிசி நடத்தி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா டி20 அணிக்கு பாண்டிங், கிளார்க், பின்ச் என பல்வேறு கேப்டன்கள் இருந்தும் அவர்களால் கைப்பற்ற முடியாத ஒரு கோப்பையாக டி20 உலகக் கோப்பை இருக்கிறது.

Langer

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்வது தான் எங்களது ஒரே இலட்சியம் என பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலக கோப்பையை வெல்வது என்பது மிக சவாலான காரியம். அனைத்தும் சரியாக இருந்தால்தான் அதை சாத்தியப்படுத்த முடியும். நிச்சயமாக கேப்டன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என உறுதியாக நம்புகிறேன்.

aus

தற்போது டி20 வடிவத்திலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் அடுத்த வருட கோப்பையை கைப்பற்றும் என்று உறுதி கூறியுள்ளார். ஜஸ்டின் லாங்கர் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement