இந்தியாவில் நடைபெறும் தொடருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சென்றால் தான் இந்த நிலைமை மாறும் – ஆஸி பயிற்சியாளர் வேண்டுகோள்

Langer
- Advertisement -

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டெஸ்ட் தொடர் கடந்த வாரம் துவங்கியது.

wivseng

- Advertisement -

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் அடுத்த மாதமும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான தொடரும் நடைபெற இருக்கிறது.

மேலும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை என்ன ஆகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில் உலக கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணி மீண்டும் கிரிக்கெட் போட்டியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது உலக கோப்பை தொடரை அங்கு நடத்த சாத்தியமே இல்லை என்று தெரிந்து விட்டது.

IndvsAus-1

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கட்டாயம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடனான தொடரில் பங்கேற்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விரும்புகிறார். மேலும் அதேபோல இந்திய அணியும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு வந்து விளையாட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

ipl

மேலும் ஐபிஎல் தொடரை பற்றி பேசுகையில் ஐபிஎல் தொடர் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்துக்களை கேட்டு வருகிறேன். ஆனால் ஐ.பி.எல் துவங்கி அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்று விளையாடவேண்டும் அப்போதுதான் கிரிக்கெட் போட்டிகளின் இயல்பு நிலை திரும்பும். மேலும் பின்னர் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வரும்போது அது நல்ல கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமான விடயமாக அமையும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement