இந்தியாவை நம்பி பெரிய திட்டம் வைத்திருந்தோம். இப்போ எல்லாம் வேஸ்ட்டா போச்சு – ஆஸி பயிற்சியாளர் புலம்பல்

Langer
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்த வருடம் அக்டோபர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக பல அணிகளும் இம்முறை வெற்றி பெற்று கோப்பையிற் கைப்பற்றுவதற்காக பலவிதமான திட்டங்களை வைத்து கடந்த பல மாதங்களாக தயாராகி வந்தன.

Cup

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலிய அணி வித்தியாசமாக ஒரு பயிற்சி களத்தை வைத்தது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை வைத்து, தங்களது முக்கியமான வீரர்கள் இதன் மூலம் பயிற்சி பெறுவார்கள் என்று திட்டம் தீட்டியுள்ளனர் .

ஆனால் இந்தியாவில் முன்னதாக மார்ச் 29ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடப்பதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக அது ஏப்ரல் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஐபிஎல் தொடர் நடப்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேலும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடப்பது கண்டிப்பாக முடியாத காரியம்தான் என்று தெரிகிறது.

Ipl cup

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது : வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கப்படுவதற்கு முன்னர் எங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பதாக இருந்தோம் . ஏனென்றால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரை இருக்கிறது .

- Advertisement -

இதற்கு ஐபிஎல் தொடரை விட சிறந்த பயிற்சி களம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் திடீரென எல்லா விஷயங்களும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது . தனிப்பட்ட எங்கள் வீரர்களின் நலனை விட உலக கோப்பை தொடர் தற்போது முக்கியமில்லை. உலக மக்களின் ஒட்டுமொத்த நலனே முக்கியம் என்று கூறியுள்ளார் ஜஸ்டின் லாங்கர்.

Smith-1

ஆனால் தற்போது இந்தியா இருக்கும் சூழ்நிலையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவே இன்னும் பல மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது. அதனால் இம்முறை ஐ.பி.எல் தொடர் நடைபெறாது என்றே கூறலாம்.

Advertisement