AUS : சச்சினின் பேட்டிங் நுணுக்கங்கள் இவரிடம் உள்ளது – ஜஸ்டின் லாங்கர்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Langer
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலகக் கோப்பை தொடருக்கு முந்தைய இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஸ்மித்தின் பேட்டிங் என்னை வியக்க வைத்தது.

ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பியிருக்கும் ஸ்மித் தற்போது சிறப்பான பார்முக்கு திரும்பியுள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சி. மேலும், இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக நிச்சயம் ஒரு முக்கிய வீரராக திகழ்வார். மேலும், தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள ஸ்மித்தின் பேட்டிங் இந்திய அணியின் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கரை போன்றே இருக்கிறது.

smith

சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் நுணுக்கங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதனைப் போன்றே தற்போது ஸ்மித் ஆடிவருகிறார். ஸ்மித்தின் இந்த ஆட்டம் உலக கோப்பையிலும் பிரதிபலிக்கும் என்று நம்பலாம் என்று ஜஸ்டின் லாங்கர் கூறினார்.

Advertisement